பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
12:07
பேச்சாற்றலும், சீரிய சிந்தனையும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
முக்கிய கிரகங்களில் கேது பகவான் 11ல் இருந்து தொடர்ந்து நன்மை தருவார். சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். மற்ற கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை. ஆனாலும், குருவின் பார்வையால் நன்மை கிடைக்கும்.கேதுவால் செயல்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் முயற்சியில் இருந்து வந்த தடைகள் மறையும். மதிப்பு மரியாதை உயரும். சூரியனால் பொருள் விரயம் ஏற்படும். ஜூலை30க்கு பிறகு அனாவசிய பேச்சை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜூலை21,22ல் பெண்களால் அதிக அனுகூலம் பெறலாம். ஆகஸ்ட் 8,9 ல் புத்தாடை அணிகலன் வாங்கலாம். ஜூலை25, 26,ஆகஸ்ட் 13,14ல் உடல்நலனில் அக்கறை காட்டவும்.பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். இடமாற்ற பீதி ஜூலை 30 க்கு பின் மறையும். ஜூலை27,28ல் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.வியாபாரம், தொழிலில் உள்ளவர்களுக்கு அரசு வகையில் அனுகூலம் பிறக்கும். செலவு அதிகரிக்கும். செவ்வாயால் எதிரிகளின் இடையூறை சந்திக்க வேண்டியிருக்கும். ஆகஸ்ட் 1,2,6,7ல் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆகஸ்ட் 3,4,5ல் எதிர்பாராத பணவரவு உண்டு.கலைஞர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். அரசியல்வாதிகள் நற்பெயரோடு நல்ல பதவியும் கிடைக்க பெறலாம். புகழ் வளர்முகமாக இருக்கும்.மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண்பது அரிது. கடும் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். விவசாயிகளுக்கு கால்நடை மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும். சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். பெண்களுக்கு குடும்பம் சிறந்து விளங்கும். சுக்கிரனால் ஜூலை18க்குள் ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். ஜூலை 2,3,4,30,31ல் அனுகூலம் காண்பீர்கள். 27க்கு பிறகு புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.
நல்ல நாட்கள்: ஜூலை18,19,20,21,22,27,28, 29,30,31, ஆகஸ்ட் 3,4,5,8,9,15,16.
கவன நாட்கள்: ஜூலை23,24 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 5,7 நிறம்: சிவப்பு , வெள்ளை
வழிபாடு: பெருமாள், முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள்.