பதிவு செய்த நாள்
13
ஆக
2013
09:08
புதனை ஆட்சிநாயகனாகக் கொண்ட மிதுனராசி அன்பர்களே!
சூரியன் 3-ம் இடத்தில் இருக்கும் சிம்மராசி அவரது சொந்தவீடாக இருப்பதால் அதிக நன்மைகளை வழங்குவார். செல்வாக்குடன் திகழ்வீர்கள். பொருளாதார வளம் கூடும். தொழிலில் லாபம் சிறப்பாக இருக்கும். உடல் நலம் சிறப்படையும்.உங்கள் ஆட்சி நாயகன் புதன் 3ல் இருப்பது நல்லதல்ல. பகைவரால் இடையூறு உருவாகும். அரசு வகையில் அனுகூலம் இருக்காது. எனவே, வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆனால், செப்.3ல் புதன் கன்னி ராசிக்கு செல்கிறார். அப்போது நன்மையை வாரி வழங்குவார். பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செவ்வாயால் இருந்த உடல்நலக்குறைவு ஆகஸ்ட்20க்குப் பிறகு மறையும். அதன்பின் செவ்வாய் 2ம் இடத்திற்கு செல்கிறார். அதனால் சிலரது வீட்டில் களவு போக வாய்ப்புண்டு. கவனம். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான சுக்கிரன் 4ம் இடத்தில் இருப்பதால் பொருளாதார வளம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செப்.8ல் அவர் துலாம் ராசிக்கு செல்கிறார். அதனால் தொழில் நிமித் தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம்.வெளியூர் பயணம் ஏற்படலாம். ஆனால், அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அதன் மூலம் நல்ல பணவரவு இருக்கும். உடல்நலம் சுகம் கிட்டும்.இதுதவிர கேது உங்களுக்கு 11-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். மற்ற கிரகங்களால் ஏற்படும் பிரச்னைகளை அவர் முறியடித்து வெற்றியை அள்ளித் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன், மனைவியிடையே அன்பு பெருகும். விருந்து விழா என உல்லாசமாக கழியும். கலைஞர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். மாணவர்கள் அக்கறையுடன் செயல்படுவது நல்லது. செப்.3 க்குப் பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம்.
நல்ல நாட்கள்: ஆகஸ்ட் 17, 18,23,24,25,26,27,30,31, செப்.1,4, 5, 6,11,12,13,14
கவன நாட்கள்: ஆகஸ்ட் 19,20,செப்.15,16
அதிர்ஷ்ட எண்கள்: 5,7 நிறம்: வெள்ளை, சிவப்பு
வழிபாடு: வியாழனன்று தட்சிணாமூர்த்தியையும், சனியன்று ஆஞ்சநேயரையும் வழிபட்டு வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். புதனன்று பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.