பதிவு செய்த நாள்
13
ஆக
2013
10:08
செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!
செவ்வாய் நன்மை தரும் இடத்தில் இல்லாவிட்டாலும், பார்வையால் நற்பலன் வழங்குவார். ஆகஸ்ட் 20ல், இவர் கடக ராசிக்கு செல்வதால் முயற்சிகளில் பின்னடைவும், ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவரது 7-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளதால், பக்தி எண்ணம் மேலிடும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதாரம் உயரும்.புதன் 10-ம் இடமான சிம்மத்தில் இருக்கிறார். இதனால் பெண்களின் ஆதரவும், அவர்களால் நன்மையும் ஏற்படும். பொருள் சேரும். புதனின் பார்வையால் பொருளாதாரம் சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இவர் செப்.3ல் கன்னி ராசிக்கு பெயர்ச்சியடைந்தாலும், அவரால் நன்மை தொடரும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும்.சூரியன் மாதம் முழுவதும் 10ம் இடமான சிம்மத்தில் இருப்பார். அங்கு அவர் எடுத்த செயலை செய்து முடிக்க அருள்புரிவார். மேலும் நல்ல பணப் புழக்கத்தையும் கொடுப்பார்.சுக்கிரன் 11-ம்இடமான கன்னியில் இருப்பது சிறப்பான அம்சம். அவரால் பணவரவு இருக்கும். சொந்தபந்தங்கள் அடிக்கடி வீட்டிற்கு வருகை புரிவர். உடல் நலம் சுகம் கிட்டும். செப்.8ல், சுக்கிரன் 12-ம் இடமான துலாம்ராசிக்கு மாறுகிறார்.அதனால் காரியத்தடைஏற்படலாம். கேது சாதகமான இடத்தில் இருந்து நன்மையைத் தந்து கொண்டிருக்கிறார். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லை நீங்கும். அபார ஆற்றல் பிறக்கும். பெண்கள் ஆபரணம் வாங்குவதுடன், பிள்ளைகளால் பெருமை அடைவர். குருபகவான் சாதமற்ற இடத்தில் இருந்தாலும் பார்வை பலத்தால் நன்மை கிடைக்கும். சனி, ராகு மீது குருபார்வை படுவதால் கெடுபலன் குறையும். கலைஞர்கள் சீராக முன்னேறுவர். மாத பிற்பகுதியில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
நல்ல நாள்: ஆகஸ்ட் 19, 20, 26,27,28,செப்.4,5,6,7, 8,11,12,15,16
கவன நாள்: ஆகஸ்ட் 30,31,செப்.1
அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: பச்சை,செந்தூரம்
வழிபாடு: நாகராஜரை வணங்குங்கள். ராகு,சனிக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் செயல்கள் தடையின்றி நடக்கும். மாலையில் வீட்டில் விளக்கேற்றி இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.