பதிவு செய்த நாள்
13
ஆக
2013
10:08
குருவை ஆட்சிநாயகனாக கொண்ட தனுசுராசி அன்பர்களே!
ராசிநாதனான குரு தற்போது 7ம் இடமான மிதுனத்தில் இருந்து பல நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபங்களை வாரி வழங்குவார். முக்கிய கிரகங்ளான சனி, ராகுவும் சாதகமாக நிலையில் இருப்பதால் நன்மை அதிகரிக்கும். சூரியன் 9ம் இடமான சிம்மத்தில் சாதகமற்ற நிலையில் இருக்கிறார். மதிப்பு மரியாதை எதிர்பார்த்தபடி இல்லாமல் போகலாம். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். ஆனால், சூரியனின் பார்வை சாதகமான இடத்தில் விழுகிறது. அதன் மூலம் அவப்பெயரில் நீங்குவதோடு, பொருளாதார வளமும் அதிகரிக்கும். கல்விகாரகன் புதன் சிம்மராசியில் இருப்பது அவ்வளவு சிறப்பானது அல்ல. அவரால் மனதில் இனம் புரியாத வேதனை உருவாகலாம். உடல் நலமும் பாதிக்கப்படும். செப்.3ல் புதன் கன்னி ராசிக்கு சென்ற பின், பல்வேறு நன்மைகளை கொடுப்பார். குறிப்பாக பெண்களின் ஆதரவு அதிகமாக இருக்கும். அவர்களால் குடும்ப நன்மை பெருகும். பணவரவும் இருக்கும். அதோடு புதனின் பார்வையும் சாதகமான இடத்தில் விழுகிறது. அதன் மூலம் பொருள் சேரும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் இருகிறார். இதனால், எதிரியால் தொல்லை அதிகரிக்கும். ஆனால், அவரின் பார்வை பலத்தால் உறவினர்களோடு பிரச்னை நீங்கி சுமூக நிலை ஏற்படும். செப்.8 ல் சுக்கிரன் 11-ம் இடத்திற்குச் செல்வதால் பணவரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை புரிவர். உடல் நலம் சுகம் கிட்டும். அவரின் பார்வை பலத்தால் பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும்.கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். செப்.8 க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புண்டு. மாணவர்கள் கல்வி வளர்ச்சி பெறுவர். செப்.3க்குப் பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் புதிய சாதனை படைப்பர். பெண்கள், குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். உங்களால் குடும்பம் சிறந்து விளங்கும். செவ்வாயின் சஞ்சாரத்தால் உஷ்ண, பித்த உபாதைகள் வரலாம்.
நல்ல நாட்கள்: ஆகஸ்ட் 17, 18,21,22, 28,29,30,31, செப்.1,7,8, 9,10,13,14
கவன நாட்கள்: செப்.2,3
அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்: வெள்ளை,நீலம்
வழிபாடு: சிவன் கோயிலுக்கு சென்று வாருங்கள். ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் கொடுத்தால் குடும்பத்தில் அமைதி ஏற்படும். காலையில் சூரிய தரிசனம் செய்ய தவறாதீர்கள்.