பதிவு செய்த நாள்
10
செப்
2013
12:09
சாதனை புரியும் எண்ணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு ஆகியோர் நன்மை தந்து கொண்டிருக்கிறார்கள். எனவே சிறப்பான பலன் உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான சொந்த வீட்டில் இடம் பெற்று உள்ளார். உங்களை பொறுத்தவரை அவர் நற்பலன் தரும் நிலையில் இல்லை. அவப்பெயரை சந்திக்கும் சூழல் வரலாம். செல்வாக்கு குறையலாம். எதிரியால் பிரச்னை ஏற்படும். வீண்விவாதங்களில் ஈடுபடுவது கூடாது. சிலருக்கு வீண் கவலைக்கு ஆளாவர். அதே நேரம் புதனின் பார்வையால் நன்மை உண்டாகும். இதன் மூலம் செயலில் வெற்றி ஏற்படும். செப். 23ல் புதன் துலாமிற்கு செல்கிறார். அதன்பின் எதிரியால் இடையூறு வரலாம்.அரசு வகையில் பிரச்னை உண்டாகும். வியாபாரிகள் வரவு-செலவு கணக்கை சரியாக வைப்பது நல்லது. சூரியன் ராசிக்கு 2ல் இருக்கிறார். இதனால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை.செவ்வாய் தொடக்கத்தில் கடகத்தில் இருக்கிறார். பித்தம், மயக்கம் போன்ற உபாதை ஏற்படும். பொருள் விரயம் ஏற்படலாம். ஆனாலும் செவ்வாயின் 4 ,7 பார்வைகளால் நன்மை உண்டு. பொருளாதார வளம் ஏற்படும். அக். 9ல் உங்கள் ராசிக்கு வருகிறார். அதன்பின் முயற்சியில் தடை உண்டாகும்.எதிரி தொல்லை தலைதூக்கும். சுக்கிரன் மாதம் முழுதும் நன்மை அள்ளித்தர இருக்கிறார். அவர் அக். 4-ந் தேதி வரை துலாமில் இருந்து செல்வாக்கு அளிப்பார். உறவினர் ஒத்துழைப்பர். அக்.4க்குப்பிறகு சுக்கிரன் விருச்சிகம் சென்றபின், பெரியோர் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் பலத்தால் வாழ்வில் இன்பகரமான சூழ்நிலை உருவாகும். கலைத்துறையில் இருப்பவர்கள் மேம்பாடு காண்பர்.இந்த மாதத்தை பொறுத்தவரை செவ்வாய், புதன், சூரியன், கேது ஆகிய கிரகங்கள் சாதகமாக இல்லாவிட்டாலும் மற்ற கிரகங்கள் பலம் பெற்று உள்ளன.
நல்ல நாட்கள்: செப்.17,18,19,24,25,26,27,28,அக்.2,3,6, 7,13,14,15,16
கவன நாட்கள்: செப்.20,21,அக்.17
அதிர்ஷ்ட எண்: 7,9 நிறம்: மஞ்சள், நீலம்
வழிபாடு: செவ்வாயன்று முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். பசுவுக்கு அகத்திக்கீரை கொடுங்கள். சூரியனை வழிபடுங்கள்.