பதிவு செய்த நாள்
09
அக்
2013
06:10
தைரியத்துடன் செயலாற்றும் கடகராசி அன்பர்களே!
ராசிக்கு 4-ம் வீட்டில் சனிபகவானும் ராகுவும் இணைந்திருப்பது சாதகமற்றது என்பதை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். ஆனாலும் அவர்கள் மீது குருவின் பார்வை விழுவதால் கெடுபலன் எதுவும் உண்டாகாது. அவர்களோடு இணைந்திருக்கும் புதன் நன்மை தருவார். அவரால் நல்ல பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதே நேரம் அக்.23 முதல் நவ.14 வரை புதன் வக்கிரம் அடைவதால் அந்த காலத்தில் மட்டும் பகைவர்களால் இடையூறு வரலாம். சூரியனும் 4-ம் இடத்தில் இருக்கிறார். அவரால் நன்மை கிடைக்கும் என்று சொல்ல முடியாது. பெண்களிடம் விரோதம் ஏற்படும். எனவே அறிமுகம் இல்லாத பெண்களிடம் நெருங்கி பழக வேண்டாம்.பூமிகாரகன் செவ்வாய் 2-ம் இடத்தில் இருப்பதால் வீட்டில் பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. தொழில், வியாபாரத்தில் கவனமாக இருப்பதோடு, வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்வது நல்லது. சுக்கிரன் 5ம் இடத்தில் இருப்பது சிறப்பானதே. அவரால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். அக்.31ல் சுக்கிரன் 6-ம் இடத்திற்கு செல்கிறார். இதனால் முயற்சியில் தடை உண்டாகும். கேதுவால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். எதிரி தொல்லை ஏற்படும். பயணத்தின் போது கவனம் தேவை. பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதாக தோன்றினாலும், சந்திரனால் நன்மை தொடர்ந்து கிடைக்கும்.குருபகவான் நன்மை தரும் இடத்தில் இல்லை என்றாலும் அவர் அக்.22 முதல் வக்கிரம் அடைய தொடங்குகிறார். ஒருகிரகம் வக்கிரம் அடையும் போது அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சாதகமற்ற குருவால் சிறப்பாக செயல்படமுடியாது அல்லவா? எனவே குருவால் கெடுபலன் நடக்காது. மாற்றாக அவருக்கே உரித்தான நன்மை தரவும் தவறமாட்டார்.
நல்ல நாட்கள்: அக்.19,20,21,22,23,26,27,28,31,நவ.1,2,7,8,9, 10,15
கவன நாட்கள்: நவ.11,12
அதிர்ஷ்ட எண்கள்: 5,6 நிறம்: சிவப்பு, பச்சை
வழிபாடு: ஊனமுற்றவர்கள், ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம்.