பதிவு செய்த நாள்
09
அக்
2013
06:10
எதிரிக்கு அஞ்சாத மனம் படைத்த சிம்மராசி அன்பர்களே!
ராசிநாதனான சூரியன் 3-ம் இடத்தில் இந்த மாதம் இருக்கிறார். இது சிறப்பான அம்சம். செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். லாபம் அதிகரிக்கும். உடல் நலம் சிறப்படையும். செயலில் வெற்றியும், பொருளாதார வளமும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். குருபகவான் 11-ம் இடத்தில் நின்று நன்மை தருகிறார். ஆனால் அவர் அக்.22ல் வக்கிரம் அடைகிறார். அப்போது அவரால் முழுமையாக நன்மை தரஇயலாது. ஆனாலும் நற்பலன் தொடரத்தான் செய்யும்.புதனும் 3-ம் இடத்தில் இருப்பதால் பகைவரால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அக்.24 முதல் நவ.14 வரை புதன் வக்கிரம் அடைவதால் அவப்பெயர் வரலாம். உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம்.4-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் அக்.31ல் 5-ம் இடமான தனுசுவிற்கு மாறுகிறார். ஆனால் அவர் இந்த மாதம் முழுவதும் நன்மை தருவார். 4-ல் இருக்கும்போது மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.5-ம் இடத்திற்கு சென்றபின் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். உங்கள் ராசியில் இருக்கும் செவ்வாயால் உங்கள் முயற்சிகளில் தடை வரலாம். பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கப்படலாம். செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் புதிய நிலம் மனை வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுமையை கடைபிடிப்பது நல்லது.
நல்ல நாட்கள்: அக்.21,22,23,24,25,29,30,நவ.3,4,9,10, 11,12
கவன நாட்கள்: அக்.18,நவ.13,14
அதிர்ஷ்டஎண்:1,7 நிறம்: செந்தூரம்,நீலம்
வழிபாடு: முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவுங்கள்.புதன்கிழமை குல தெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள்.