விருந்தாளி என்றால் உறவினர் என்றுநினைக்கிறோம். ஆனால், உண்மையில் நமக்கு ரத்தசம்பந்தம் இல்லாதவர்களைத் தான் விருந்தாளிஅல்லது அதிதி என்று குறிப்பிடுவர். விருந்தாளியை தெய்வமாக, அதிதி தேவோ பவ என்கிறது வேதம். ஒருமுறை எமலோகத்தில் எமதர்மன் இல்லாத சமயத்தில், விருந்தாளியாக ஒரு அந்தணச் சிறுவன்வந்தான். ஏதோ வேலையாக வெளியில் சென்ற எமன் திரும்பி வர மூன்று நாட்களானது. அதனால், சிறுவன் ஏதும் சாப்பிடாமல் பட்டினி கிடக்க நேர்ந்தது. வந்திருந்த விருந்தாளிக்கு உணவிடாத பாவம் தன்னைச் சேருமே என எமன் வருந்தினான். அதற்கு ஈடாக மூன்று வரங்களை, அவனுக்கு அளிக்க முன் வந்ததாக கடோப உபநிஷதம் என்னும் நூல் கூறுகிறது. வீட்டுக்கு வந்த விருந்தினர் தெய்வத்திற்குச் சமம் என்பதால் அவர்களுக்கு உணவு தராமல் இருப்பது பாவம் என்கிறது சாஸ்திரம்.