சூரியன் மட்டும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். புதன் ஜூலை 23 முதல் ஆக.8 வரையும் , சுக்கிரன் ஆக. 8 வரையும் நன்மையளிப்பர். இது வரை இருந்த பின் தங்கிய நிலை மாறும். வளர்ச்சிக்கான காலமாக அமையும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். மாத இறுதியில் வீண்விவாதத்தை தவிர்க்கவும்.குடும்பத்தில் வசதி வாய்ப்பு அதிகரிக்கும். நீண்ட நாளாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கலாம். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். ஆக. 8க்குப் பிறகு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு உருவாகலாம். விட்டுக் கொடுத்து போகவும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவ செலவு குறையும்.
தொழில், வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு கவனம். மாத தொடக்கத்தில் அலைச்சல் அதிகரிக்கும். ஜூலை 23 க்கு லாபம் அதிகரிக்க தொடங்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் ஈடேறும். பகைவரால் பிரச்னை நேர்ந்தாலும் சாமர்த்தியமாக முறியடித்து விடுவீர்கள்.
பணியாளர்களுக்குத் தடை அனைத்தும் விலகும். வேலையில் இருந்த பிரச்னை மறையும். இடமாற்றத்தின் காரணமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய வேண்டியதிருக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கை நிறைவேறும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கலைஞர்களுக்குப் பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தத்தை பெறுவர். பணப்புழக்கம் இருக்கும். மாத இறுதியில் அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும்.
அரசியல் வாதிகள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி கிடைக்க வாய்ப்புண்டு.
மாணவர்களுக்கு பின்தங்கிய நிலை மறையும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். நல்ல மதிப்பெண் கிடைக்கும். விவசாயிகள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். மாத இறுதியில் கால்நடை மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.
பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவர். மனம் போல ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.
நல்ல நாள்: ஜூலை 19, 20, 21, 26, 27, 28, 29, 30 ஆக. 5, 6, 7, 8, 12, 13, 16
கவன நாள்: ஜூலை 31, ஆக.1,2
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: பச்சை, செந்துõரம்
வழிபாடு: நவக்கிரக வழிபாடு நன்மை தரும். சனிதோறும் சனி பகவானை வழிபட்டு காக்கைக்கு அன்னம்இடுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »