பதிவு செய்த நாள்
12
நவ
2014
11:11
பழநி: பழநி கோயில் உண்டியல் வசூல் எண்ணிக்கையில் 27 நாட்களில் ஒரு கோடியே 46 லட்சத்து 42 ஆயிரத்து 195 ரூபாய் கிடைத்துள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. ரொக்கமாக ஒரு கோடியே 46 லட்சத்து 42 ஆயிரத்து 195 ரூபாயும், தங்கம் 1260 கிராம், வெள்ளி 8 ஆயிரத்து 600 கிராம், வெளிநாட்டு கரன்சி 507 கிடைத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட வேல், பிஸ்கட், மோதிரம், தாலி, சுவாமிசிலை, ஆள்ரூபம், பாதம், கொலுசுகள், காசுகள், வீடு, கார், உள்ளிட்டவைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.