திருப்பூர் : வீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும் டிச.,1ம் தேதி நடைபெறு கிறது. இதற்காக யாகசாலை பூஜைகள், வரும் 28ம் தேதி துவங்குகிறது. இதனால், திருப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. குறிப்பாக யாகசாலை அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள் ளன. ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மகாலட்சுமி தாயார், பூதேவி தாயார், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார மூர்த்தி களுக்கு என 36 யாக குண்டங்கள், வேதிகைகளுடன் யாகசாலை அமைக்கப்பட உள்ளது. பெருமானின் திவ்ய தத்துவங்கள் 26, வாயுக்கள் 10 என ஆகம விதிகளின்படி, யாக சாலை நேர்த்தி யாக அமைக்கப்பட்டு வருவதாக, திருப்பணி குழுவினர் தெரிவித்தனர்.