திருவள்ளூர்: திருவள்ளூரில், இஸ்கான் சார்பில், தாமோதர தீப திருவிழா நடந்தது. பகவான் கிருஷ்ணரின் லீலைகளில் மிக சிறந்ததாக கருதப்படுவது தாமோதர லீலை. தாமம் என்றால் கயிறு; உதரம் என்றால் வயிறு. பகவானை அன்பினால் மட்டும் தான் வெல்ல முடியும் என்ற, இத்தகைய அற்புத லீலையை கொண்டாடுவதற்கும், யசோதையை போல அனைவரும் அன்பை வளர்த்துக் கொள்ளவும், தாமோதர மாதம் எனப்படும் கார்த்திகை மாதத்தில் தாமோதர தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவள்ளூர் வி.எம்.நகர், ’இஸ்கான்’ அலுவலகம் சார்பில், நெய் தபம் ஏற்றி தாமோதர தீப திருவிழா கொண்டாடப்பட்டது. மேலும், ஞாயிற்றுக்கிழமை தோறும், மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, பஜனை பாடல்கள் பாடுவது, பகவத் கீதை சொற்பொழிவு நடக்கிறது. இத்தகவலை, திருவள்ளூர் இஸ்கான் (கிருஷ்ண பக்தி இயக்கம்) கிளை நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.