திருவாலங்காடு அருகில் உள்ள வேம்பு மாரியம்மன் கோயிலில் உள்ள வேப்ப மரம் அம்மனுக்குக் குடையாக நிற்கும் பகுதிவரை வெண்மையாகக் காட்சியளிக்கிறது. துளிர்க்கும்போது வெள்ளையாகத் துளிர்த்து, உதிரும் போது வெள்ளை இலையாகவே உதிர்வது விசேஷமாகும். உதிர்ந்த இலைகளை வீட்டில் வைக்க, நோய்கள் அண்டாது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.