பதிவு செய்த நாள்
19
பிப்
2015
12:02
பல்லடம் : பல்லடத்தில் அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா, நேற்று கோலாகலமாக நடைபெற்றது; ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி, சுவாமி தரிசனம் செய்தனர். பல்லடம் பகுதியில் புகழ்வாய்ந்த அங்காளம்மன் கோவிலில், 40வது ஆண்டு குண்டம் திருவிழா, கடந்த 15ல் துவங்கியது. கொடியேற்றம், யாகசாந்தி, மாவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடந்தன. நேற்று, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கரகம் ஏற்றி வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் குண்டம் இறங்கினர். இன்று காலை 10:00 மணிக்கு கொடி இறக்குதல், மஞ்சள் நீராடல், அம்மன் வீதியுலா மற்றும் பேச்சியம்மன் பூஜையுடன், விழா நிறைவு பெறுகிறது.