தியாகதுருகம்: தியாகதுருகம் மலையம்மன் கோவிலில் சித்ராபவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. தியாகதுருகத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மலையின் தெற்கு பகுதியில், நூற்றாண்டு பழமையான பகவதிமலையம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மலர் அலங்காரம் செய்து யாகம் வளர்த்து பூஜைகள் செய்யப்பட்டது. இரவு உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் கிரிவலம் வந்து அம்மனுக்கு வழிபாடு நடத்தினர். சுவாமிநாத குருக்கள் பூஜைகளை செய்தார். தியாகதுருகம், புக்குளம், பிரிதிவிமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் பூஜையில் கலந்து கொண்டனர்.