பதிவு செய்த நாள்
22
ஜூன்
2015
10:06
மூன்றாவது கண்: நாம் சிவனை எப்போதும் திரிநேத்ரன் என்றுதான் கூறுகிறோம். ஏனெனில் அவனுக்கு மூன்று கண்கள் உள்ளன. மூன்றாவது கண் என்றால் தலையைப் பிளந்து கொண்டு கண் வருவதல்ல. இதற்கு மற்றொரு கருத்து உண்டு. அதாவது உனது உள்முக சக்தி, கருத்து விரிவடைந்து யோகத்தில் ஒன்றி மூன்றாவது கண் வருவதாகக் கூறப்படுகிறது.
மூன்றாவது கண் ஞானப்பார்வைக்கு மற்ற இரு கண்கள் சாதாரணமான உறுப்புகள். உலக வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பார்க்க மட்டும்தான். உனது கோணத்திலிருந்து நீ பார்க்கிறாய். மற்ற பிராணிகள் தங்கள் கோணங்களில் இருந்து பார்க்கின்றன. அதனால்தான் உலகமே மாயை என்கிறோம். பார்க்கும் பொருளெல்லாம் மாயை அல்ல, ஆனால் நாம் பார்க்கும் விதம் தான் மாயை. ஆனால் உண்மைத் தன்மையைக் காண மூன்றாவது கண் வேண்டும்.
நந்தி: நந்தி என்பது காத்திருப்பது என்பதை உணர்த்துகிறது. ஏனெனில் காத்திருப்பது என்பது இந்தியக் கலாச்சாரத்தின் முக்கிய அம்சம், நந்தி சிவன் வெளியே வர வேண்டும் என்று காத்திருக்கவில்லை. நந்தி எதையும் எதிர்பாராமல் உட்கார்ந்து காத்திருக்கிறது. நந்தி எப்போதும் காத்திருக்கும் அந்த குணம் நல்ல குணம் கிடைத்து விட்டதைக் காட்டுகிறது. கோயிலுக்குப் போவதற்கோ சொர்க்கத்துக்குப் போவதற்கோ, ஏதாவது கிடைப்பதற்கோ அல்ல, நீ சும்மா உட்கார வேண்டும். தியானம் என்பது ஒரு செயல் அல்லது அது ஒரு குணம் அல்லது தன்மை. பிரார்த்தனை என்றால் நீ கடவுளுடன் பேச விரும்புகிறாய் என்று அர்த்தம். ஆனால் தியானம் என்பது இறைவனிடமிருந்து கேட்டுக் கொள்வது. இது தான் நந்தியின் குணம். சும்மா விழித்து இருப்பது. நந்தி சுறுசுறுப்பாக விழிப்புடன் புத்துணர்ச்சியுடன் உட்கார்ந்திருப்பது இதுதான் தியானம்.
திரிசூலம்: வாழ்வின் மூன்று நிலைகளை அதாவது தன்மைகளைக் காட்டுகிறது. இவைகள் இடா, பிங்களா, சுஷும்னா என்று கூறப்படுகின்றன. இவைகள்தான் முக்கிய மூன்று நாடிகளான இடது, வலது, நடு என்று மனித உடலில் கூறப்படுகின்றன. இதற்குப் பிராணமய கோசம் எனப் பெயர். இந்த நாடிகள்தான் உயிர்நிலைக்கு வழிகள். நம் உடலில் மொத்தம் 72,000 நாடிகள் மூன்று பாகங்களாகப் பிரிகின்றன.
இடா, பிங்களா என்பவை மனிதனின் இயற்கையான சிவ, சக்தி அல்லது ஆண், பெண் எனக் கூறலாம். இது மனுஷ ரீதியாகச் சொல்லப்படும் பெண்மை அல்லது ஆண்மையைக் குறிப்பவை அல்ல.
இடா, பிங்களா இரண்டும் சேர்ந்து மனிதனை இயக்குகிறது. அநேகர் இந்த இரண்டில் மட்டுமே வாழ்ந்து மறைகிறார்கள். ஆனால் சுஷும்னா என்பது மனித உடலின் முக்கியமான பகுதி. இந்த சுஷும்னாவில் சக்தி புகும்போது வாழ்வு ஆரம்பிக்கிறது. உனக்கு உள்ளத்தில் ஒரு புதுத் தெளிவு ஏற்பட்டு புறத்தில் எத்தனை பாதிப்புகள் உண்டாலும் அகத்தே பாதிப்பில்லாமல் தனித்து இயங்குகிறது.
சந்திரன்: சிவனுக்கு அநேகப் பெயர்கள் உண்டு. சாதாரணமாக எல்லோராலும் கூறப்படுவது சோமன் அல்லது சோமசுந்தரர், சோமன் என்றால் சந்திரன் எனப்பொருள்படும். இதன் உள்ளார்ந்த பொருள் போதை சிவன் சந்திரனை ஒரு ஆபரணமாகப் பயன்படுத்துகிறான். ஏனெனில் ஒரு யோகி உள்ளே போதையுடன் எப்போதும் சுறுசுறுப்புடன் எச்சிரிக்கையுடன் இருக்கிறான். இந்தப் போதையை அனுபவிக்க நீ எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீ குடித்திருந்தாலும் விழித்திருந்து போதையை அனுபவிக்க வேண்டும். (போதை என்பதை சாதாரணப் பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. இது உள்ளிருந்து பெருகும் அமிர்தம்.)
யோகத்தினால் உடலின் உள்ளே போதை ஏற்பட்டாலும், மனம் நூறு சதவீதம் எச்சரிக்கையுடன் இருக்கும். கடந்த இருபது ஆண்டுகளாக ஆய்வு செய்த பிரபல விஞ்ஞானி, மூளையில் அநேக நரம்பு மண்டலங்கள் உள்ளன. உனது உடலை சில முறைகளில் வைத்துக் கொண்டால், உடல் ஒருவித போதையை உண்டாக்குகிறது: அதை மூளை ஏற்றுக்கொள்கிறது. இதைத்தான் மனித உடல் தனது போதையான அமைதி, சந்தோஷம், ஆனந்தம் ஆகியவை வெளியிலிருந்து ஏற்படாமல் உள்ளிருந்தே உண்டாவது என்கிறோம் என்கிறார்.
அந்த விஞ்ஞானி இந்த ரசாயனத்துக்கு ஒரு பெயர் கொடுக்க விரும்பினார் அதைத் தான் ஆனந்தம் சந்தோஷம் என்கிறார். அதைத்தான் ஆன்ந்தமிதே எனப் பெயரிட்டார். இதை நாமே தேவையான அளவு உருவாக்கினால், இதைப் பெரிதும் குடித்துக் கொண்டும், எப்போதும் விழித்துக் கொண்டும் இருப்போம்.
நாகம் (பாம்பு) பாம்புக்கு ஒரு சில விசேஷ சக்திகள் உள்ளன. சிவன் தனது கழுத்தில் பாம்பை அணிந்துள்ளான். இது ஒரு அடையாளம் மட்டுமல்ல இதற்குப் பின்னால் அநேக விஞ்ஞான உண்மைகள் உள்ளன. நமது உடலில் மொத்தம் 114 சக்கரங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான 7 சக்கரங்களைப் பற்றி மட்டுமே நாம் பேசுகிறோம். இவைகளில் ஒன்றான விஷுத்தி சக்கரம் நமது தொண்டைக் குழியில் இருக்கிறது. இது பாம்புடன் அதிகத் தொடர்புடையது. விஷுத்தி என்றால் விஷத்தை நீக்குதல்.
விஷுத்தி என்றால், வடிகட்டுதல் நமது விஷுத்தி சக்தி வாய்ந்ததாக இருந்தால் உனக்கு ஏற்படும் எல்லாவற்றையும் வடிகட்டுதல் நடைபெறும். சிவாவின் முக்கியமான சக்தி விஷுத்தி அதனால் தான் அவனை விஷகண்டா அல்லது நீலகண்டா என்கிறோம். ஏனெனில் அவன் எல்லா விஷத்தையும் வடிகட்டுகிறான்.
விஷம் என்பது நாம் சாப்பிடுவதில் இருப்பது மட்டுமல்ல, இது அநேக வழிகளில் உள்ளே செல்கிறது. ஒரு கெட்ட எண்ணம், ஒரு கெட்ட உணர்வு, கெட்ட செயல், கெட்ட சக்தி ஆகியவை நம் வாழ்வை நாசப்படுத்தும்.
நமது விஷுத்தி விழிப்புடன் இருந்தால் அது எல்லா சக்திகளையும் வடிகட்டி நம்மை கெட்ட சகவாசத்திலிருந்து காப்பாற்றும் விஷுத்தி விழிப்புடன் இருந்தால் அவனைச் சுற்றி என்ன பாதிப்புகள் ஏற்பட்டாலும் அவை ஒன்றும் செய்ய முடியாது. அவன் ஒரு சக்தியுள்ள மனிதனாக இருப்பான்.