பதிவு செய்த நாள்
25
ஜூன்
2015
04:06
மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம்
சுமாரான பலன் பெறும் ராசிகள்!
மிதுனம், கன்னி, மீனம்
பரிகார ராசிகள்!
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம்
குரு வணக்கம்-1
மனம் போல் வாழ வியாழ தேவா
தனமும் நலமும் வளமுந் தருவாய்
கோள் தரு கொடுமை தீர்த்தே நன்மை
வேள்வியில் வந்து விரைவுடன் ஈவாய்
குரு வணக்கம்-2
பெருநிறை செல்வம் மேன்மை பெற்றிடும் சுகங்கள் யாவும்
வருநிறை மரபு நீடி வாய்க்கும் சந்ததி தழைக்க
குருநிறை ஆடை ரத்னம் தான் பெற அருளும் தேவ
குருநிறை வியாழன் பொற்றாள் குரைகழல் தலைக் கொள்வோமே.
குரு பயோடேட்டா!
திசை - வடக்கு
பிடித்த ராசி - தனுசு, மீனம்
அதிதேவதை - பிரம்மா
பிடித்த நிறம் - மஞ்சள்
பிடித்த தானியம் - கொண்டைக்கடலை
பிடித்த மலர் - வெண்முல்லை
பிடித்த உலோகம் - தங்கம்
நைவேத்யம் - கடலைப்பொடி சாதம்
வாகனம் - யானை
நட்பு கிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை கிரகம் - புதன், சுக்கிரன்
மனைவி - தாரா
குழந்தைகள் - பரத்வாஜர், யமகண்டன், கசன்
தலங்கள் - ஆலங்குடி, திருச்செந்துõர்
பலன் - பொருள், கல்வி, புத்திரப்பேறு
குரு ஸ்லோகம்!
குருர் பிரம்ஹா குருர் விஷ்ணுர்
குருர் தேவா மஹேச்வர:
குரு ஸாக்ஷாத் பரம் பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ.