பதிவு செய்த நாள்
25
ஜூன்
2015
04:06
குரு பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினருக்கு பிரச்னைகள் ஏற்படக்கூடும். அவற்றைத் தவிர்க்க இந்த பரிகாரத்தை மேற்கொண்டால் நிம்மதி பெறலாம்.
ரிஷபம்
வெள்ளிக்கிழமையன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட வேண்டும். வெண்பட்டு உடுத்தி மல்லிகை மாலை சூட்டி சேமியா பாயாசம், சாம்பார் சாதம், மாம்பழம் நைவேத்யம் செய்ய வேண்டும். சக்கரத்தாழ்வார் காயத்ரி படிக்க வேண்டும்.
ஓம் ஸுதர்சனாய வித்மஹே
ஜ்வாலா சக்ராய தீமஹி
தந்நோ சக்ர: ப்ரசோதயாத்!!
சிம்மம்
ஞாயிற்றுக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு பாலபிஷேகம் செய்து அன்னத்தால் காப்பிட வேண்டும். சந்தனக்கலர் பட்டு உடுத்தி, வாழைப்பழம், சாத்துக்குடி, முள்ளங்கி சாம்பார் சாதம் படைத்து
அர்ச்சனை செய்ய வேண்டும். சிவன் காயத்ரி படிக்க வேண்டும்.
ஓம் மஹாதேவாய வித்மஹே
ருத்ர மூர்த்தயே தீமஹி
தந்நஸ் சிவ: ப்ரசோதயாத்
விருச்சிகம்
செவ்வாய்க்கிழமை தட்சிணாமூர்த்திக்கு குங்குமம் கலந்த பன்னீர் அபிஷேகம் செய்ய வேண்டும். சந்தனக்காப்பிட்டு, சிவப்பு பட்டு உடுத்தி, செண்பகப்பூ மாலை சூட்ட வேண்டும். மாதுளை, துவரம்பருப்பு சாதம், ஜிலேபி நைவேத்யம் செய்து அர்ச்சிக்க வேண்டும். பைரவர் காயத்ரி படிக்க வேண்டும்.
ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கஸிஷ்ணாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்
மகரம்
சனிக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு பன்னீர் அபிஷேகம் செய்ய வேண்டும். கொண்டைக்கடலை, முல்லைப்பூ மாலை சாத்தி மஞ்சள் வஸ்திரம் உடுத்த வேண்டும். ஆரஞ்சு, கருப்பு திராட்சை, வேகவைத்த கடலைப்பருப்பு உருண்டை, எலுமிச்சை சாதம் நைவேத்யம் செய்ய வேண்டும். விஷ்ணு காயத்ரி படிக்க வேண்டும்.
ஓம் நாராயணாய வித்மஹே
வாஸு தேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்