பதிவு செய்த நாள்
07
ஜூலை
2015
02:07
அசுவினி
உறவினர்களின் அன்பும், ஆதரவும் உண்டாகும்
பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும்.
புதிய வீடு,வாகனம் வாங்க யோகமுண்டு.
தொழிலில் வளர்ச்சியும் லாபமும் அதிகரிக்கும்.
பரணி
எதிர்பார்த்த நன்மை விரைவில் கிடைக்கப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும்.
சுபநிகழ்ச்சிகள் ஆடம்பர முறையில் நிறைவேறும்.
தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம்.
கார்த்திகை
பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.
பணியாளர்களுக்கு பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும்.
மாணவர்கள் வெளியூர், வெளிநாட்டில் படிக்க வாய்ப்புண்டு.
வாகன பயணத்தின்போது விழிப்புடன் இருக்கவும்.
ரோகிணி
எதிலும் நிதானத்தைப் பின்பற்றுவது அவசியம்.
பெற்றோர் உடல்நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
தொழிலில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும்.
அத்யாவசியச் செலவுக்காக கடன் வாங்க நேரிடும்.
மிருகசீரிடம்
வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு உருவாகும்.
பெண்களுக்கு ஆடை, ஆபரணம் வாங்க யோகமுண்டு.
மனம் போல மங்கல நிகழ்ச்சி நடத்தி மகிழலாம்.
ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை கொள்வது நல்லது.
திருவாதிரை
பூர்வீகச் சொத்து மூலம் லாபம் கிடைக்கும்.
தொழிலில் புதிய ஒப்பந்தம் மூலம் வருமானம் கூடும்.
அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
புனர்பூசம்
கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும்.
பணியாளர்களுக்கு விரும்பிய சலுகை கிடைக்கும்.
பெண்கள் ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவர்.
மாணவர்கள் ஆர்வமுடன் படித்து முன்னேறுவர்.
பூசம்
பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.
தொழிலில் நேரடி கவனம் செலுத்துவது அவசியம்.
பெரியவர்களின் வழிகாட்டுதல் நன்மைக்கு வழிவகுக்கும்.
பிள்ளைகளின் செயல்பாடு மனதிற்கு ஆறுதல் தரும்.
ஆயில்யம்
குடும்பத்தில் குழப்பம் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.
தொழிலில் லாபம் உயரும். சேமிக்கவும் வாய்ப்புண்டு.
வாகனப் பயணத்தில் விழிப்புடன் இருக்கவும்.
மாணவர்களுக்கு கல்விக்கடன் எளிதாக கிடைக்கும்.
மகம்
திறமையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள்.
சுபவிஷயத்தில் தடை நீங்கி மளமளவென நிறைவேறும்.
உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.
அரசு விஷயத்தில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.
பூரம்
குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நல்லது.
பூர்வீகச் சொத்து பிரச்னை நல்ல முடிவுக்கு வரும்.
தொழிலுக்காக வங்கி நிதியுதவி எளிதில் கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் சாதனை படைக்க முயல்வர்.
உத்திரம்
புதிதாக வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும்.
தொழிலில் புதிய ஒப்பந்தம் மூலம் வருமானம் கூடும்.
பணியாளர்களுக்கு மனம் போல இடமாற்றம் கிடைக்கும்.
பெண்களின் மனம் போல சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
அஸ்தம்
அனுபவசாலிகளின் பேச்சை மதிப்பது அவசியம்.
குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலைக்கும்.
சுபவிஷயம் தடையின்றி இனிதே நடந்தேறும்.
தொழிலில் உழைப்புக்கேற்ப லாபம் கிடைக்கும்.
சித்திரை
விருப்பம் போல ஆடை, ஆபரணம் சேரும்.
அரசு வகையில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
தொழிலில் படிப்படியான வளர்ச்சி உண்டாகும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
சுவாதி
சங்கடம் நீங்கி வாழ்வில் நிம்மதி உண்டாகும்.
சகோதரர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள்.
தொழிலில் உழைப்புக்கேற்ப உயர்வு ஏற்படும்.
பணியாளர்கள் எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேறும்.
விசாகம்
எதிலும் திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.
தொழிலில் ஆதாயம் படிப்படியாக உயரும்.
மாணவர்களுக்கு நட்பு விஷயத்தில் கவனம் தேவை.
அனுஷம்
பொறுப்பு அதிகரித்தாலும் வாழ்வில் வளர்ச்சி உண்டாகும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும்.
மனைவியின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை கொள்வது நல்லது.
கேட்டை
பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.
கடன் விஷயத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது.
மனைவியின் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.
சுபவிஷயம் ஆடம்பர முறையில் நிறைவேறும்.
மூலம்
மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.
சுபவிஷயம் தடையின்றி இனிதே நிறைவேறும்.
புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும்.
பூராடம்
குடும்பத்தில் வசந்தக் காற்று வீசத் தொடங்கும்.
தொழிலில் மளமளவென வளர்ச்சி மேலோங்கும்.
பணியாளர்கள் விரும்பிய இடமாறுதல் கிடைக்கும்.
உடல்நலனில் அக்கறை செலுத்துவது அவசியம்.
உத்திராடம்
வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
பெண்களின் எதிர்பார்ப்பு இனிதே நடந்தேறும்.
தொழிலில் புதிய ஒப்பந்தம் மூலம் லாபம் உயரும்.
பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
திருவோணம்
சுபவிஷயம் தடையின்றி எளிதில் நிறைவேறும்.
தொழிலில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும்.
பணியாளர்கள் எதிர்பாராத இடமாற்றத்திற்கு ஆளாகலாம்.
மாணவர்களுக்கு நட்பு விஷயத்தில் கவனம் தேவை.
அவிட்டம்
குடும்ப வாழ்வில் நிம்மதி நிலைத்திருக்கும்.
சுபவிஷயத்திற்காக கடன் வாங்கும் சூழல் உருவாகும்.
தொழிலில் லாபம் படிப்படியாக அதிகரிக்கும்.
வாகனப் பயணத்தில் கவனமாக இருப்பது நல்லது.
சதயம்
பிள்ளைகளின் செயல்பாடு பெருமிதம் அளிக்கும்.
பொறுப்பை பிறரிடம் ஒப்படைப்பது கூடாது.
தொழிலில் சீரான வளர்ச்சியும், லாபமும் கிடைக்கும்.
அரசு விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
பூரட்டாதி
கணவன், மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கும்
சுபவிஷயத்தில் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
தொழிலில் எதிர்பார்த்ததை விட லாபம் உயரும்.
பணியாளர்கள் திறமைக்கேற்ப பதவி உயர்வு காண்பர்.
உத்திரட்டாதி
உடல்நலன் குறித்த விழிப்புணர்வு மேலோங்கும்.
கடன் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
தொழிலில் சீரான வளர்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும்.
மாணவர்கள் கல்விக்காக வெளியூர் செல்ல நேரிடும்.
ரேவதி
சகோதர வகையில் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.
வீடு, மனை வகையில் லாபம் வர வாய்ப்புண்டு.
தொழிலில் புதிய ஒப்பந்தம் மூலம் லாபம் உயரும்.
உடல்நலனில் அக்கறை செலுத்துவது அவசியம்.