அசோக வனத்தில் இருந்த சீதையைக் கண்ட ஆஞ்சநேயர், கண்டேன் கற்பினுக்கு அணியை கண்களால் என்று ராமனிடம் தெரிவித்தார். ராமனுக்கு இச்செய்தி காதில் தேன் பாய்ந்தது போல இனித்தது. இதற்காக, ஆஞ்சநேயருக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என நீண்ட நேரம் யோசித்தார் ராமர், என்ன கொடுத்தாலும் ஈடாகாது என்ற முடிவுக்கு வந்தவராக, அவரைக் கட்டித் தழுவி தன்னையே கொடுத்தார். அதுவரையில், சீதை மட்டுமே ராமனின் தோள்களைத் தழுவும் பாக்கியம் பெற்றவளாக இருந்தாள். அந்த அன்புத் தழுவலைப் பெற்ற ஆஞ்சநேயர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இதனால் தான், நம்மாழ்வார் தன் பாசுரத்தில், பகவான் அடியார்களுக்கு என்ன கொடுக்கலாம் என்று எப்போதும் காத்திருக்கிறார் என்று குறிப்பிடுகிறார்.