சாட்டையில் பம்பரம் போலாட பேய்கள் தலை சுழல வேட்டைகளாடி வரும்போது தெய்வங்கள் மெய்மறந்து பாட்டுகள் தேடிப் பதுங்கி நின்றோடப் பகலவன் போல் கோட்டையில் வாழ்பவனே
நீ கருப்பய்யா எங்கள் குல தெய்வமே. சிங்கையில் வாழ் அய்யன் சித்தருவாள் ஏந்தும் கையன் வங்கி சமுதாடு கொண்ட மார்த்தாண்டன் யெங்கள் பிரான் அண்ணல் கருப்பண்ணரவர் யானினைத்தேன் முத்துமணி வண்ணனையே நீ துணையாய் வா
தரையேழும் போற்றும் புதுவை நகரம் தழைக்க வந்த துரைராசன் கோட்டைக் கருப்பணசுவாமி துரந்தரனே அரை நாழிகையும் பிரியாமல் தோழநற்றுணையாக வைத்த வரதா தென்சிங்கை கருப்பா பெலத்த வலுச் சிங்கமே.
ஆறாரு செய்த பிழையிருந்தாலும் அன்போர்க்குகந்து பாராதிருந்திட ஞாயமுண்டோயிந் தப்பா தகங்கள் நீராகிலும் சற்றே மாறாதிருந்து யென்னை றெக்ஷீ அய்யா காராரும் மேனித் துரையே பெரிய கருப்பண்ணனே!
எந்தன் மேல் குற்றம் ஏதுபிழைகள் இருந்திடினும் தந்தை தாய் சேயின் முகங் கண்டிரங்கிடும் தன்மையென வந்தனம் செய்து உன் பாதார விந்தம் வணங்கதற்கு கந்துகம் ஏறி வருவாய் பெரிய கருப்பண்ணனே!