Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) போட்டியில் வெற்றி! கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) கையில் பணப்புழக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) கையில் பணப்புழக்கம்!

பதிவு செய்த நாள்

17 அக்
2015
02:10

திட்டமிட்டுப் பணியாற்றும் மகர ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன் நவ. 2ல் இடம் மாறினாலும் நன்மையை அளிப்பார். புதன் அக்.26ல் இருந்து சாதக இடத்திற்கு வருகிறார். சூரியன், கேது , சனி மாதம் முழுவதும் நற்பலன் தருவர். எதிர்பார்ப்பு நிறைவேறும். வீட்டுக்குத் தேவை ஆடம்பர முறையில் பூர்த்தியாகும். சமூகத்தில் மதிப்பு சிறப்பாக இருக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கையில் பணப்புழக்கம் கூடும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்றவை நவ. 5க்கு பிறகு மறையும். பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது நல்லது.

தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி அடையும். அக். 21,22-ந் தேதிகளில் எதிர்பாராத பணவரவு இருக்கும். நவம்பர் 13க்கு பிறகு தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடவும் வாய்ப்புண்டு.

பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். அதிகாரிகளின் மத்தியில் நற்பெயர் உண்டாகும். அக்டோபர் 26க்கு பிறகு அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறும். நவ. 10,11ம் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.

கலைஞர்கள் சிறப்பான நிலை காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.

அரசியல்வாதிகள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் அக்டோபர் 26-ந் தேதிக்கு பிறகு உழைப்புக்கு ஏற்ற வளர்ச்சி காண்பர். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர்.

விவசாயிகள் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் அடைவர். வழக்கு விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்

பெண்கள் மகிழ்ச்சியுன் காணப்படுவர். அக். 26க்கு பிறகு நன்மை மேலோங்கும். அண்டை வீட்டார் நட்பு பாராட்டுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணியில் திருப்தி உண்டாகும். வியாபாரம் செய்யும் பெண்கள் பெண்களுக்கு சுக்கிரனால் லாபத்துக்கு குறை இருக்காது. ஆடை, அணிகலன் சேரும்.

நல்ல நாள்: அக்.18, 21, 22, 25, 26,  நவ.3, 4,10,11,12,13,14

கவன நாள்: நவ. 5,6,7 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 2,4                      நிறம்: பச்சை, செந்துõரம்

பரிகாரம்: முருகனை வழிபட்டால் நன்மை மேலோங்கும். நாக தேவதையை வணங்கி வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு வில்வமாலை சாத்தி வழிபடுங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar