பதிவு செய்த நாள்
17
அக்
2015
02:10
பெற்றோர் மீது அன்பு கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
இந்த மாதம் சுக்கிரன் நவ. 2 வரையிலும், புதன் நவ.13 வரையிலும் நன்மை அளிப்பர். சூரியன், குரு மாதம் முழுவதும் நற்பலன் வழங்குவர். பொருளாதார வளம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் பெண்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு மேலோங்கும். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆடை, அணிகலன் சேர வாய்ப்புண்டு. உடல்நலம் சீராக இருக்கும். நவ. 5க்கு பிறகு உஷ்ணம் தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண்களை பங்கு தாரராக கொண்ட தொழில் வளர்ச்சி அடையும். அக். 13க்கு பிறகு எதிரியால் தொல்லை ஏற்படலாம்.அக். 19,20, நவ.15,16 தேதிகளில் எதிர்பாராமல் ஆதாயம் கிடைக்கும்.
பணியாளர்கள் நன்மையான பலன் அடைவர். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை எளிதில் நிறைவேறும். சக பெண் ஊழியர்களால் நன்மை உண்டாகும். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. நவ.13க்கு பிறகு கடின உழைப்பு தேவைப்படும்.
கலைஞர்கள் சிறப்பான நிலை காண்பர். புதிய ஒப்பந்தம்எளிதாக கிடைக்கும். நவ.13க்கு பிறகு தொழில் போட்டி உருவாகும்.
அரசியல்வாதிகள் பலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் முன்னேற்ற நிலையில் காணப்படுவர். போட்டியில் பங்கேற்று மகிழ்வர்.
விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானம் பெறலாம். நெல்,சோளம், கேழ்வரகு, கொள்ளு ஆகிய பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம்.
பெண்களால் குடும்பம் சிறப்படையும். குடும்பத்தினரிடம் நன்மதிப்பு பெறுவர். அண்டை வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் காண்பர்.
நல்ல நாள்: அக். 19,20,23,24,31, நவ. 1,2,8,9,10,11,15,16
கவன நாள்: நவம்பர் 3,4 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: பச்சை, செந்துõரம்
பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். நாக தேவதையை வணங்குங்கள். முருகன் வழிபாடு நன்மை அளிக்கும். ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யலாம்.