3. மூலமெனு மாதார வட்டந் தானே முச்சுடரு முக்கோண மூன்று நாடிச் சீலமெனுஞ் சிவலிங்க பாத தீர்த்தந் திருவடியுந் திருமேனிமாகும் நடமு மாகும் கோலமுடன ண்டமெல்லாந் தாங்கிக் கொண்டு கொழுந்து விட்ட கம்பமதாய் மேலே நோக்கி ஆலமுண்ட கண்டமெலாந் தானாய் நின்ற அகாரமுதல் அவ்வெழுத்தை அறிந்து பாரே.
8. காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்: காணரிய பொருளாகுங் காட்டும் போதே ஆண் பெண்ணாய் அலியாகி அடியு மாகி அப்பாலைக் கப்பாலாய் அமர்ந்த சோதி வீண்பயிலும் வேதமெல்லாந் தேடிக் காணா வெறும்பாழ தாகியே மேவி நின்றார் சேண்பயிலும் செகசோதி மூலந் தன்னைத் தேடரிய பாதமென்றே தெளிந்து நோக்கே.
9. தெளிவரிய பாதமது அகார மாகிச் சிற்பரமுந் தற்பரமுந் தானே யாகி அழிவரிய சோதியது தானே யாகி அடிநடுவு முடியாகி யமர்ந்து நின்று மொழிவரிய முதலாகி மூல மாகி முச்சுடருந் தானாகி முடிந்த சோதி சுழியினிலே முனையாகிக் கோப மாகிச் சொல்லரிய வெழுத்தொன்றே தொகுத்துப் பாரீர்
10. தொகுப்பது தாம் மந்திரங்கள் கருவி நூல்கள் சொல்லரிய தத்துவங்கள் தம்மை யெல்லாம் வகுத்துடனே யிவற்றையெலாங் கண்டு நீங்கி வாகான உடலுயிரை வகையாற் கண்டு பகுப்புடனே சேராமற் பாதந் தன்னைப் பரகதிக்கு வழியெனவே பற்றிக் கொண்டு விகற்பமிலா மூலமதில் நின்ற சோதி மேலான பாதமென்றே மேவி நில்லே.
11. மேவியதோர் சற்குருவின் பாதந் தன்னை மெய்ஞ்ஞான மென்றதனை மேவிக் கொண்டு ஆவியுடல் காயமெல்லா மறிந்து பார்த்தே அத்தனார் வடிவமென்றே அறிந்துகொண்டு பாவனையு ளானவெல்லாம் விட்டு நீங்கிப் பகலிரவு மற்றிடத்தே கருத்தை வைத்துச் சீவனையுஞ் சிவந்தனையும் ஒன்றாய்த் தானே திருமூலர் பாதமொன்றித் திடமாய்க் காணே.