ஒழியாத சுழுமுனையி லொடுங்கி நல்ல உற்றகலை வாசிசிவ யோகத் தேகி வழியான துறையறிந்து மவுனங் கொண்டு மகத்தான அண்ட வரை முடிமேற் சென்று தெளிவான ஓங்கார வடிவேல் கொண்டு தெளிந்துமன அறிவாலே தன்னைக் கண்டு வெளியான பரவெளியில் வாச மாகி வேதாந்த சத்திசிவ ஆகி காப்பே.
2. உண்டான சத்திசிவம் ஏக மாகி உளங்கனிந்து பூரணமாய் நிற்கும் போது குண்டான மாங்கனியைக் கையில் வாங்கிக் குமரனுடன் கணபதியைக் குணமாய்ப் பார்த்து நன்றாகக் கிரிவலமாய் வந்த போக்கு நல்லகனி தானீவோம் என்று சொன்னார்: பயன்றான கனியறிந்து குமரன் றானும் பாய்ந்துமயி லேறிகிரி வலஞ்சென்றானே.
3. சென்றபின்பு கணபதியும் ஆலோ சித்துத் தீர்க்கமுள்ள மேருகிரி நீர்தா மென்று கண்டவுடன் சிவனுமையாள் பாதந் தன்னைக் கருத்துடனே சுற்றிவந்து கனியை வாங்கிக் கொண்டந்த சிவனுமையைத் தியானஞ் செய்து குறியறிந்து நெறி தமக்குள் திருவைப் போற்றித் தின்றுருசி கண்டறிந்து நிற்கும் போது தீர்க்கமுள்ள கணபதியை வாவென் றாரே.
9. பறந்துபோய்ப் பலவிதமாய் ரூபங் கொண்டு பந்திபந்தி யாங் அசுரர் பறந்து வந்தார்; சிறந்துவந்த சேனைகளை நன்றாய்ப் பார்த்துத் தீர்க்கமுள்ள மயிலேறித் தெளிந்து நின்றே அறந்தழைக்க வேணுமென்று தூல சூட்சம் அரூபமெனுங் காரணமாய் ரூபங் கொண்டு நிரந்தரமாய் வந்தபொலா அசுரர் தம்மை நிர்த்தூளி செய்துதவம் நிலைகொண்டானே.
10. நிலைகொண்டு நின்றசெயங் கொண்டு சிந்தை நேர்மையுடன் தவஞ்செய்யு முனிவர் கண்டு கலைகொண்டு மனந்தெளிந்து மகிழ்ச்சி யாகிக் கானமயில் வீரனடி கருதிப் போற்றித் தலைகொண்டு தாள்பணிந்தே அருட்கண் பெற்றுத் தபோதனரும் ரிடிகளுமே தாம் பணிந்து சிலைகொண்டு நின்றவடி வேலன் தன்னைத் தெரிசித்தே அவரவர்கள் பதிசென் றாரே.
11. பதிதேடி யவரர்கள் செல்லும் போது பத்தியுள்ள அகத்தியமா முனிவன் வந்து விதியறிந்தே அசுரர்கிளை மாள வென்று வெற்றியுள்ள வடிவேலைத் தியானம் பண்ணிக் கெதியறிந்து தூலமுடன் சூட்சமாகிக் கிருபையுள்ள காரணமாம் ரூபங் கொண்டு சதியறிந்து சங்காரஞ் செய்தா யையா சண்முகமே என்குருவே! சரணந்தானே
12. சரணமென்றே அகத்தியமா முனியைப் பார்த்துச் சண்முகமாய் நின்றவடி வேலன் தானும் திரணமதாய்த் தானறிந்து, நீ யார்? என்னைத் திருவடியைப் பூசை செய்யுஞ் சேயன் என்றார்: கரணமந்தக் கரணமதாய் வந்த தேதோ? கருணையுடன் வா என்று கடாட்சம் நல்கி தருணமறிந் துதவுவது தருமமென்று சங்கையுடன் தான் வந்த வகைசொல்வாயே?