கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
1. இருள் வெளியாய் நின்றசிவ பாதம் போற்றிஎழுத்ததனின் விவரத்தை விரித்துச் சொல்வேன்;அருவுருவாய் நின்றதுவே எழுத்த தாகும்ஆதியந்தம் அண்டபிண்ட மதுவே யாகும்;திருவுருவாய் ரவிமதியாய் நின்ற ரூபம்சிவசத்தி திருமாலின் ரூப மாகும்;வருமுருவே சிவசத்தி வடிவ மாகும்;வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே.2. வந்ததுவும் போனதுவும் வாசியாகும்;வானில்வரும் ரவிமதியும் வாசியாகும்;சிந்தைதெளிந் திருப்பவனா ரவனே சித்தன்;செகமெலாஞ் சிவமென்றே யறிந்தோன் கித்தன்நந்தியென்ற வாகனமே தூல தேகம்:நான்முகனே கண்மூக்குச் செவுநாகாகும்;தந்திமுகன் சிவசத்தி திருமூச் சாகும்;தந்தைதாய் ரவிமதியென் றறிந்து கொள்ளே.3. அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கமேஅடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்;பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்;பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்;மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயுமகத்தான சிவசத்தி அடங்கும் வீடு;சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்சிவசிவா அவனவனென் றுரைக்க லாமே.4. ஆமப்பா வுலகத்தில் பெருநூல் பார்த்தோர்அவரவர் கண்டதையெல்லாம் சரிதை யென்பார்;ஓமப்பா கல்செம்பைத் தெய்வ மன்றேஉருகுவார் பூசிப்பார் கிரியை யென்பார்வாமப்பா யோகமென்று கனிகாய் தின்றுவாய்பேசா வூமையைப்போல திரிகுவார்கள்;காமப்பா ஞானமென விண்டு மேலும்காக்கைபித்தன் மிருகம்போல் சுற்றுவாரே.5. சுற்றுவார் பெருநூலைப் பார்த்துப் பார்த்துத்தூடிப்பா ருலகத்தில் சிற்சில் லோர்கள்!தெற்றுவா ரவர்பிழைக்க அனேக வேடம்தேகத்தி லணிந்துகொண்டு திரிகு வார்கள்:பற்றுவார் குருக்களென்பார் சீட ரென்பார்பையவே தீட்சைவைப்பார் தீமை யென்பார்.கத்துவார் திரிமூர்த்தி தாமே யென்றுகாரணத்தை யறியாத கசடர் தானே;6. தானென்ற வுலகத்தில் சிற்சில் லோர்கள்சடைபுலித்தோல் காசாயம் தவா டம் பூண்டுஊனென்ற வுடம்பெல்லாம் சாம்பல் பூசிஉலகத்தில் யோகியென்பார் ஞானியென்பார்;தேனென்ற சிவபூசை தீட்சை யென்பார்;திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார்;கானென்ற காட்டுக்கு ளலைவார் கோடிகாரணத்தை யறியாமல் கதறுவாரே.7. கதறுகின்ற போகளையா கோடா கோடி;காரணத்தைக் கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம்பதறுகின்ற பேர்களெல்லாம் பராப ரத்தைப்பற்றிநின்று பார்த்தவர்கள் சுருக்க மப்பா!உதறுகின்ற பேர்களெல்லா முலகத் துள்ளேஉதித்தகலை தம்முள்ளே யறிய மாட்டார்;சிதறுகின்ற பேர்களைப்போல சிதறி டாமல்சிவசத்தி வரும்போதே தன்னில்நில்லே.8. நில்லென்ற பெரியோர்கள் பாடை யாலேநீடுலகம் தன்னுள்ளே நாலுவேதம்வல்லமையாய்ச் சாத்திரங்க ளிருமூன் றாகவயிறுபிழை புராணங்கள் பதினெட் டாகக்கல்லுகளைக் கரைப்பதுபோல் வேதாந் தங்கள்கட்டினா ரவரவர்கள் பாடையாலே;தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதிதொடுத்தார்க ளவரவர்கள் பிழைக்கத்தானே.9. தானென்ற வுலகத்தி லில்லா விட்டால்தன்பெருமை யாலழிந்து சகத்தில் வீழ்வார்;ஊனென்ற வுடம்பெடுத்தா லெல்லாம் வேணும்;உலகத்தி லவரவர்கள் பாடை வேணும்மானென்ற சிவகாமி சிவனுங் கூடிமாமுனிவர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார்;தேனென்ற சிவகாமி யருளினாலேதிரட்டினார் வெகுகோடி தேச பாடை.10. தேசத்தின் பாடைதனை யறிந்தி டாமல்தெளிவாகத் தாமுரைப்பார் பாடை பார்த்தோர்;ஆசிப்பா ருலகத்தில் கண்டதெல்லாம்;ஆச்சரியந் தனைக்கண்டு மறந்து போவார்வாசிதனை யறியாத சண்டி மாண்பர்வார்த்தையினால் மருட்டிவைப்பார் வகையி லாமல்;நாசிநுனி யதனடுவில் சிவத்தைக் கண்டோர்நான்முகனும் திருமாலும் சிவனுந் தாமே.11. சிவசிவா பதினெண்பேர் பாடற் கெல்லாம்திறவுகோல் வால்மீகன் பதினாறாகும்;சிவம்பெத்த சித்தரேல்லா மென்னூல் பார்த்துச்சிவனோடே கோள் சொன்னார் சினந்தான் நாதன்;அவமாகிப் போகாமல் சிவனுத் தாரஅருளினால் திறந்துசொன் னேன் உலகுக் காக;நவமான நவக்கிரகந் தன்னுள் ளேயேநாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால்.12. நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால்நடுவீதி குய்யமுதல் உச்சி தொட்டுத்தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டுத்தாயாரைப் பூசித்து வேதம் ஓது;வாக்குவாய் அசையாமல் மவுனங் கொண்டுவாசிவரு மிடத்தில் மனம் வைத்துக் காத்துநீக்குவாய் வாசியொடு மனந்தான் புக்குநினைவதனி லடங்கிவரும் வரிசை காணே:13. காணரிதே யெவராலு மிருசு வாசம்:காண்பவனே சிவசித்த னவனே யாகும்;பூணரிதிவ் வுலகத்தி லிந்நூல் கிட்டில்பூலோக சித்தனென வுரைக்க லாகும்.காணரிது சிவசக்தி திருமூச் சாகும்;காட்டாதே மூடருக்மே யிந்நூல் தன்னை;தோணரிது விழிமயக்கம் சும்மாப்போமேசொல்லரிய சூட்சுமத்தைச் சொன்னே னப்பா!14. சூட்சமிந்நூல் சொல்லுகிறேன் வாசி காண;சூட்சாதி சூட்சத்தைத் துறக்கப் போகா;சாட்சியில்லை துணையில்லை கேள்வி யில்லை;சந்தேக மொன்றுமில்லை விழியைக் காணக்காட்சியென்ன கற்பகத்தில் வசிக்கு மாப்போல்காரணத்தைக் கண்ணாலே கண்டி ருக்கஆட்சிதரு முமையாளப் படியே கண்டேன்;ஆனந்தத் திருக்கூத்தின் நடக்கை காப்பே.15. காப்பதற்குப் பத்தியத்தைச் சொல்லக் கேளு;காய்கனிகள் பஞ்சரசம் பரமான் னங்கள்ஏற்கையுட னுண்டுகொண்டு சிவத்தைக் காத்தேஎன்மகனே சித்தருடைக் குருநூல் பாராய்;ஆத்துமத்துக் கழிவில்லா திருக்க வேணும்;அவரவர்கள் நித்யகர்மம் நடக்க வேணும்;தீர்க்கமுட னின்றவர்க்கு வாசி சித்திசிறப்புடனே பதினாறும் பலிக்குந் தானே.16. தானவனா யிருக்கவென்றால் வாசி வேணும்;தனக்குள்ளே தானிற்க இடமும் வேணும்;வானவனாய் நின்றவர் கட் கெல்லாஞ் சித்திவானக்குள் மனமிருக்க மதிபோல் காணும்தேனவனாஞ் சித்தருக்குத் தெவிட்டா மூலிசிரசப்பா வுடலுக்குப் பதியே யாகும்கோனவனா யிருக்கவென்று குறியைச் சொன்னேன்குவலயத்தில் பதினாறுங் குறுகத் தானே.