Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நந்தீஸ்வரர் - பூஜாவிதி கருவூரார் - பூஜாவிதி
முதல் பக்கம் » பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு
இராம தேவர் - பூஜாவிதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2015
03:12

1. ஆதியென்ற மணிவிளக்கை அறிய வேணும்;
அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்
சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்
சுகம்பெறவே மனோன்மணியென் னாத்தாள் தன்னை
நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்
நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்;
வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று
விளங்குவதும் பூசையிது வீண்போ காதே.

2. போகாமல் நின்றதோ ரையா நீதான்
பூரணத்தி னான்கலை ஐந்தும் பெற்றே
ஆகாம லானந்த வல்லி யாலே
அடிமுடியி னடுவாசி யாறுக் குள்ளே
வாகாமல் வாலையுடை மூலத் தாலே
வழிதோன்றும் மூன்றெழுத்தை யுரைக்க வேணும்;
சாகாமல் சாகுமடா இந்த மூலஞ்
சசிவட்டம் நடுக்கோணமுக் கோண மாமே.

3. முக்கோண மூசுழிதற் கோண மாகி
முதலான மூலமணி வாலை தன்னில்
நாற்கோண நாலுவரை நயந்து காக்க
நாயகியாள் பரஞ்சோதி நாட்டமுற்றுத்
தீக்கோணத் திக்குதிசை யிருந்த மாயம்
தெரிந்திடவே யுரைத்திட்டேன் விவர மாக;
தாக்கோண விட்டகுறை வந்த தென்றால்
தனியிருந்து பார்த்தவனே சித்த னாமே.

4. சித்தான மூன்றெழுத்துச் செயலாஞ் சோதி
சீரியவை யுங்கிலியும் சவ்வு மாகி
முத்தான லட்சவுரு செபிக்கச் சித்தி
முற்றிடுமே யெதிரியென்ற பேய்கட் குந்தான்
வித்தான வித்தையடா முட்டும் பாரு;
விரிவான முகக்கருவு மூன்று கேளு;
சத்தான அதன்கருவும் சிலையில் வைத்துச்
சதுரான விதிவிவர மறியக் கேளே;

5. கேளப்பா பலிகொடுத்துப் பூசை செய்து
கிருபையுள்ள வருவேற்றித் திட்ட மாக
வாளப்பா சுடுகாட்டின் சாம்பல் தன்னில்
வளமாகப் புதைத்துவிடு நடுச்சா மத்தில்;
ஆளப்பா அடியற்று மரண மாகி
ஆண்டிருந்த தவசுநிலை தான்குலைந்து
காணப்பா கண்மணியே! வீழ்வான் பாவி!
கதைதெரியச் சொல்லுகிறே னின்னம் பாரே

6. இன்னமின்னங் கண்முன்சோ தனையு மாகும்;
ஈடேற வேணுமென்றா லிதனிற் சூட்சம்
அன்னமின்னா அகிற்கட்டை தேவ தாரம்
அறிவுடைய முளைசீவிச் சிங்கை யோதி
வன்னமின்னார் பேர்சொல்லி நசியென் றேதான்
வலுவான நூற்றெட்டு வுருவும் போடு;
சன்னமின்னா மரத்தடியி லிருந்து கொண்டு
சதிராக ஆணிகொண் டடித்தி டாயே.

7. அடித்தமுளை பிடுங்கிவைத் திறுக்கிப் போடு
ஆனந்த வுருக்குலைந்து பட்டுப் போகும்;
தொடுத்தமுதல் நாலாநாள் கண்டு தானுந்
தொகைமுடிந்து வாச்சுதடா விந்தப் போக்கு
விடுத்த பின்பு விடமேறிக் கருவிப் போகும்;
விரித்துரைத்தேன் பூட்டிதுவே வீண்போ காது
தடுத்துவிடு நகரத்தி லடித்துப் பாரு
தட்டழிந்து உயிர்முதலாய்ச் சேத மாமே.

8. ஆமப்பா அடிதரிசிங் களத்தி லானால்
அதிசயங்காண் கண்டவர்க்கே யடைக்க லம்போம்
வீமப்பா வெளிதிறந்து சொன்னேன் பாரு;
விளையாட்டே யில்லையடா விந்தப் போக்கு;
சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கிச்
சுருக்கெனவே தியானிப்பா யாத்தாள் மூலம்
தாமப்பா சத்தியமே சொன்னேன் பாரு;
தவறாது ராமனுடை வாக்யந் தானே.

9. தானென்ற மூலமுடன் சித்தி பண்ணு;
தனதான நூற்றெட்டுக் குள்ளே சித்தி
ஆனென்ற அண்டர்பதி யெட்டு மாடும்;
அறுபத்து நால்மூலி யெல்லா மாடும்;
கோனென்ற கோடிசித்துக் கணத்தி லாடுங்
குணமாக ரேவதிநாட் செய்ய நன்று;
வானென்ற அட்டமியிற் செய்ய நன்று;
வளர்பிறையில் செய்தவனே யோகி யாமே.

10. யோகியா யாவதற்கீ துனக்குச் சொன்னேன்;
ஒகோகோ முன்னுரைத்த மூலத் தாலே
யோகிகளா யோகாந்த வல்லி யாட்கிங்
கேட்டிலே யெழுதினதால் எல்லாமாச்சு;
தாகிகளாய்த் தாயுடைய கிருபை யாலே
தவமாகும் மவமாகும் சுபமுண் டாகும்;
மோகிகளால் மூலபூசா விதிபத் தாலே
முத்திபெறச் சித்திவிளை பத்துமுற்றே.

 
மேலும் பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு »
temple news
நினைமின் மனனே! நினைமின் மனனேசிவபெரு மானைச் செம்பொனம் பலவனைநினைமின் மனனே! நினைமின் மனனே!அலகைத் தேரின் ... மேலும்
 
5. திருமால் பயந்த திசைமுகன் அமைத்துவரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்துமலைமகள் கோமான் மலர் அடி ... மேலும்
 

திரு ஏகம்ப மாலை நவம்பர் 06,2015

(திருக்கச்சி ஏகாம்பரநாதரைத் துதித்துப் பாடிய மாலை)1. அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் ... மேலும்
 

திருத் தில்லை நவம்பர் 06,2015

1. காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் ... மேலும்
 
temple news
1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar