23. இட்டகுறி நாதவிந்து ரூபங் காண இயலறியாச் சண்டாளர் சுட்டு மாய்வார்; விட்டகுறை வந்ததென்றால் தானே யெய்தும்; விதியில்லார்க் கெத்தனை தான் வருந்தி னாலும் பட்டுமன மாய்தலல்லால் வேறொன் றில்லை; பத்தியிலார்க் குரைத்து மனம் பாழ்போக்காதே; திட்டமதாய்ப் பாணம்வைத்துத் தேவி பூசை சீர்பெற்றார் பதினெட்டுச் சித்தர் தாமே.