நல்ல மருந்திம் மருந்துசுகம் நல்கும் வயித்திய நாத மருந்து
சரணங்கள்:
அருள்வடி வான் மருந்து நம்முள் அற்புதமாக அமர்ந்த மருந்து இருளற வோங்கு மருந்து அன்பர்க் கின்புரு வாக இழிந்த மருந்து நல்ல
சஞ்சலந் தீர்க்கும் மருந்து - எங்குந் தானேதா னாகித் தழைக்கும் மருந்து அஞ்சலென் றாளும் மருந்து சச்சி தானந்த மாக அமர்ந்த மருந்து நல்ல
வித்தக மான மருந்து சதுர் வேத முடிவில் விளங்கும் மருந்து தத்துவா தீதமருந்து என்னைத் தானாக்கிக் கொண்ட தயாள மருந்து நல்ல
பிறப்பை ஒழிக்கும் மருந்துயார்க்கும் பேசப் படாத பெரிய மருந்து இறப்பைத் தவிர்க்கும் மருந்து என்னுள் என்றும் மதுரித்தி னிக்கும் மருந்து நல்ல
அம்பலத் தாடும் மருந்து பர மானந்த வெள்ளத் தழுத்தும் மருந்து எம்பல மாகும் மருந்துவேளூர் என்னுந் தலத்தி லிருக்கும் மருந்து நல்ல
சேதப் படாத மருந்து உண்டால் தேன்போ லினிக்குந் தெவிட்டாத மருந்து பேதப் படாத மருந்துமலைப் பெண்ணிடங் கொண்ட பெரிய மருந்து நல்ல
பால்வண்ண மாகும் மருந்து அதிற் பச்சை நிறமும் படர்ந்த மருந்து நூல்வண்ணம் நாடும் மருந்து உள்ளே நோக்குகின் றோர்களை நோக்கும் மருந்து நல்ல
பார்க்கப் பசிபோம் மருந்து தன்னைப் பாராத வர்களைச் சேரா மருந்து கூர்க்கத் தெரிந்த மருந்து அனு கூல மருந்தென்று கொண்ட மருந்து நல்ல
கோமளங் கூடும் மருந்து நலம் கொடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மருந்து நாமள வாத மருந்து நம்மை நாமறி யும்படி நண்ணும் மருந்து நல்ல
மூவர்க் கரிய மருந்து செல்வ முத்துக் குமரனை ஈன்ற மருந்து நாவிற் கினிய மருந்து தையல் நாயகி கண்டு தழுவும் மருந்து நல்ல
10. மெய்யருள் வியப்பு
செஞ்சுருட்டி) (ரூபக தாளம்
பல்லவி:
எனக்கு முனக்கு மிசைந்த பொருத்த மென்ன பொருத்தமோ! இந்தப் பொருத்த முலகில் பிறருக் கெய்தும் பொருத்தமோ!
சரணம்
தனக்கு நிகரிங் கில்லா துயர்ந்த தம்ப மொன்றதே தாவிப் போகப் போக நூலின் தரத்தில் நின்றதே! கனக்கத் திகைப்பற்றங்கே நானுங் கலங்கி வருந்தவே கலக்க நீக்கித் தூக்கி வைத்தாய் நிலைபொ ருந்தவே எ
இங்கோர் மலையி னடுவி லுயர்ந்த தம்பம் நணுகவே ஏறிப் போகப் போக நூலின் இழைபோல் நுணுகவே அங்கே திகைத்து நடுங்கும் போதென் நடுக்கம் நீக்கியே அதன்மே லுயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை யாக்கியே! எ
இரவிற் பெரிய வெள்ளம் பரவி எங்குந் தயங்கவே யானுஞ் சிலரும் படகி லேறியே மயங்கவே விரவித் தனித்தங் கென்னை யொருகல் மேட்டி லேற்றியே விண்ணி லுயர்ந்த மாடத் திருக்க விதித்தாய் போற்றியே எ
மேலைப் பாற்சிவ கங்கை யெனுமோர் தீர்த்தந் தன்னையே மேவிப் படியிற் றவறி நீரில் விழுந்த என்னையே ஏலத் துகிலு முடம்பும் நனையா தெடுத்த தேயொன்றோ எடுத்தென் கரத்திற் பொற்பூண் அணிந்த இறைவன் நீயன்றோ எ
என்ன துடலு முயிரும் பொருளும் நின்ன அல்லவோ? எந்தா யிதனைப் பெருக வெனநான் இன்று சொல்லவோ? சின்ன வயதி லென்னை யாண்ட திறத்தை நினைக்குதே சிந்தை நினைக்கக் கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்குதே! எ
அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பா ரில்லையே! அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வா ரில்லையே! எப்பா லவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லையே! எனக்கும் நின்மே லன்றி யுலகி லிச்சை இல்லையே! எ
அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்குதே! அணைப்போ மென்னு முண்மை யாலென் ஆவி தங்குதே! விரைசேர் பாதம் பிடிக்க என்கை விரைந்து நீளுதே! மேவிப் பிடித்துக் கொள்ளுந் தோறும் உவகை ஆளுதே! எ
தனியன் மேல்நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லையே! தகுமைந் தொழிலும் வேண்டுந் தருதல் வல்லையே! வினவு மெனக்கென னுயிரைப் பார்க்க மிகவும் நல்லையே! மிகவும் நான்செய் குற்றங் குறித்து விடுவாய் அல்லையே! எ
என்னை யாண்ட வண்ணம் எண்ணில் உள்ள முருகுதே! என்னை விழுங்கி எங்கும் இன்ப வெள்ளம் பெருகுதே! உன்ன வுன்ன மனமு முயிரு முடம்பு மினிக்குதே! உன்னோ டென்னை வேறென் றெண்ணின் மிகவும் பனிக்குதே எ
உன்பே ரருளை நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்குதே! உண்டு பசிதீர்ந் தாற்போற் காதல் மிகவும் துடிக்குதே! அன்பே அமையு மென்ற பெரியார் வார்த்தை போயிற்றே! அன்போர் அணுவும் இல்லா எனக்கிங் கருள லாயிற்றே! எ
திருவருள் விலாசப்பத்து
சிவசண்முக சிவஞான தேசிகன் திருவடி வாழ்க!
ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே தெய்வ யானைமகிழ் மணிக்குன்றே! அரசே! முக்கட் பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே! செவ்வேல் பிடித்தருளும் பெருந்தகையே! பிரம ஞானம் வீறுமுகம் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும் விளக்கமே ஆனந்த வெள்ளமே! முன் தேறுமுகப் பெரியவருட் குருவா யென்னைச் சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே!