கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
1. சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனைமுந்தை வினை தொலைத்துன் மொய்கழற்கோ ளாக்காதேநிந்தையுறு நோயால் நிகழவைத்தல் நீதியதோஎந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே!2. மத்தனைவன் னெஞ்சகனை வஞ்சகனை வன்பிணிகொள்பித்தனை வீணாட்போக்கும் பேயேனை நாயேனைமுத்தனையா யுன்றன் முளரித்தாட் காளாக்கஎத்தனைநாட் செல்லும் எழுத்தறியும் பெருமானே!3. நன்னெறிசேர் அன்பர் தமை நாடிடவும் நின்புகழின்சென்னெறியைச் சேர்ந்திடவுஞ் செய்தா யெனக்குனக்கும்முன்னறியேன் பின்னறியேன் மூடனேன் கைம்மாறிங்கென்னறிவேன் ஐயா! எழுத்தறியும் பெருமானே!4. மைப்படியுங் கண்ணார் மயலுழக்கச் செய்வாயோ?கைப்படிய வுன்றன் கழல்கருதச் செய்வாயோ?இப்படியென் றப்படியென் றென்னறிவே னுன்சித்தம்எப்படியோ ஐயா! எழுத்தறியும் பெருமானே!5. நில்லா வுடம்பை நிலையென்றே நேசிக்கும்பொல்லாத நெஞ்சப் புலையனே னிவ்வுலகிற்சொல்லா மனநோயாற் சோர்வுற் றலையுமல்லல்எல்லா மறிவாய் எழுத்தறியும் பெருமானே!6. தீதறிவேன் நன்கணுவுஞ் செய்யேன் வீணாட்போக்கும்வாதறிவேன் வஞ்சகனேன் வல்வினையேன் வாய்மையிலேன்;குதறியேன் மாலயனுஞ் சொல்லரிய நின்பெருமையாதறிவேன் ஐயா! எழுத்தறியும் பெருமானே!7. மாறாத வன்பிணியால் மாழாந்து நெஞ்சயர்ந்தேகூறாத துன்பக் கொடுங்கடற்குள் வீழ்ந்தடியேன்ஆறாத தரற்றி அழுகின்றேன் நின்செவியில்ஏறாதோ ஐயா! எழுத்தறியும் பெருமானே!8. உண்ணாடும் வல்வினையால் ஓயாப் பிணியுழந்துபுண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே!கண்ணாளா! உன்றன் கருணை எனக்களிக்கஎண்ணாயோ ஐயா! எழுத்தறியும் பெருமானே!9. புன்செய்கை மாறாப் புலையமட மங்கையர் தம்வன்செய்கை யாலே மயங்குகின்ற வஞ்சகனேன்கொன்செய்கை மாறாத கூற்றன் வருவானேல்என்செய்வேன் ஐயா! எழுத்தறியும் பெருமானே!10. சங்குடையான் தாமரையான் தாள்முடியுங் காண்பதரிதாம்கொங்குடைய கொன்றைக் குளிர்சடையாய்! கோதையொருபங்குடையாய்! ஏழை முகம் பாராது தள்ளிவிட்டால்.எங்கடைவேன் ஐயா! எழுத்தறியும் பெருமானே!11. மன்றி னிடைநடஞ்செய் மாணிக்க மாமலையே!வென்றிமழுக் கையுடைய வித்தகனே! என்றென்றுகன்றின் அயர்ந்தழுமென் கண்ணீர் துடைத்தருளஎன்று வருவாய் எழுத்தறியும் பெருமானே!12. மன்னளவிற் சோதி மணிபோல்வாய் மாதவத்தோர்தென்னளவும் வேணிச்சிவனே! எனவொருகாற்சொன்னளவிற் சொன்னவர்தந் துன்பொழிப்பாய் என்பரதுஎன்னளவிற் காணேன் எழுத்தறியும் பெருமானே!13. மின்போல்வார் இச்சையினால் வெம்புகிறேன் ஆனாலுந்தன்போல்வாய்! என்னின்ற தாய்போல்வாய்! சார்ந்துரையாப்பொன்போல்வாய்! நின்னருளிப் போதடியேன் பெற்றேனேல்என்போல்வா ரில்லை எழுத்தறியும் பெருமானே!14. பூமாந்தும் வண்டெனநின் பொன்னருளைப் புண்ணியர்கள்தாமாநதி நின்னடிக்கீழ்ச் சார்ந்து நின்றார் ஐயோநான்காமாந்த காரமெனுங் கள்ளுண்டு கண்மூடிஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே!15. பன்னருமிப் பார்நடையிற் பாடுழன்ற பாதகனேன்துன்னியநின் பொன்னடியைச் சூழாதே னாயிடினும்புன்னிகரேன் குற்றம் பொறுக்கப் பொறுப்புனக்கேஎன்னருமைத் தாய்நீ எழுத்தறியும் பெருமானே!16. வீட்டுக் கடங்கா விளையாட்டுப் பிள்ளையெனத்தேட்டுக் கடங்காத தீமனத்தா லாந்துயரம்பாட்டுக் கடங்காநின் பத்தர் அடிப்புகழ்போல்ஏட்டுக் கடங்கா தெழுத்தறியும் பெருமானே!17. பன்னும் மனத்தாற் பரிசிழந்த பாதகனேன்துன்னுமல வெங்கதிரோன் சூழ்கின்ற சோடையினால்நின்னருணீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன்இன்னுமறி யாயோ எழுத்தறியும் பெருமானே!18. கல்லை நிகராங் கடைமனம்போம் கானெறியிற்புல்லைமதித் தையோவைம் பூவிழந்த பொய்யடியேன்ஒல்லைபடு கின்ற ஒருவே தனைதனக்கோர்எல்லை அறியேன் எழுத்தறியும் பெருமானே!19. பொன்னைமதித் தையாநின் பொன்னடியைப் போற்றாதகன்னிகரும் நெஞ்சாற் கலங்குகின்ற சைதவனேன்இன்னல் உழக்கின்ற ஏழைகட்கு மேழைகண்டாய்;என்னை விடாதே எழுத்தறியும் பெருமானே!20. மாசுவரே என்னும் மலக்கடலில் வீழ்ந்துலகோர்ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல்கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரித்தடியார்ஏசுவரே ஒற்றி எழுத்தறியும் பெருமானே!21. ஊர்சொல்வேன் பேர்சொல்வேன் உத்தனே! நின்றிருந்தாள்சீர்சொல்வேன் என்றனைநீ சேர்க்கா தகற்றுவையேல்நேர்சொல்வா யுன்றனக்கு நீதியீ தலதலவென்றேயார்சொல்வார் ஐயா! எழுத்தறியும் பெருமானே!22. நீக்கமிலா மெய்யடியர் நேசமிலாப் பொய்யடியேன்ஊக்கமிலா நெஞ்சத்தின் ஒட்டகலச் செய்வாயேல்தூக்கமிலா ஆனந்தத் தூக்கமின்றி மற்றுமிங்கோர்ஏக்கமிலேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே!23. போகின்ற வஞ்சகரைப் போக்கியுன்றன் பொன்னடிக்காள்ஆகின்றமேலோர் அடிவழுத்தா நாயேற்குப்பாகின் தனிச்சுவையிற் பாங்காகும் நின்னருளைஈகின்ற தென்றோ எழுத்தறியும் பெருமானே!24. ஊழை அகற் றஉளவறியாப் பொய்யனிவன்பீழைமனம் நம்மைப் பெறாதம் மனங்கொடியதாழையென எண்ணியென்னைத் தள்ளிவிட்டா லென்செய்வேன்ஏழைநாள் ஒற்றி எழுத்தறியும் பெருமானே!25. மடுக்க முடியா மலவிருட்டிற் சென்றுமனம்கடுக்கமுடி யாப்புலனாற் கட்டிச் சுமக்க வைத்ததொடுக்க முடியாத துன்பச் சுமையையினிஎடுக்கமுடி யாதே எழுத்தறியும் பெருமானே!26. முள்ளளவு நெஞ்ச முழுப்புலைய மாதர்களாம்கள்ளளவு நாயிற் கடைப்பட்ட என்றனக்கேஉள்ளளவும் அன்பர்க் குதவுமுன்றாட் கன்பொருசிற்றெள்ளளவு முண்டோ எழுத்தறியும் பெருமானே!27. பண்ண முடியாப் பரிபவங்கொண் டிவ்வுலகில்நண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன்உண்ணமுடி யாவமுதாம் உன்னையன்றி எவ்வெவர்க்கும்எண்ணமுடி யாதே எழுத்தறியும் பெருமானே!28. வெங்கொளித்தேள் போன்ற வினையால் வெதும்பிமனம்அங்கொளிக்கா துன்னை அழைத்தழுது வாடுகின்றேன்;இங்கொளிக்கா நஞ்சமுண்ட என்னருமை அப்பா! நீஎங்கொளித்தாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே!29. பித்தளைக்குங் காமப் பெரும்பேய் மயக்குமயல்வித்தனைத்தாம் ஆணவம்பொய் வீர மழுக் காறுசினம்கொத்தனைத்தாம் வஞ்சங் கொலைமுதலாம் பாவங்கள்இத்தனைக்கும் நான்காண் எழுத்தறியும் பெருமானே!30. ஒல்லையே நஞ்சனைத்தும் உண்ட தயாநிதிநீஅல்லையோ! நின்றிங் கயர்வேன்முன் வந்தொருசொற்சொல்லையோ ஒற்றியூர் தூயதிருக் கோயிலுள்நீஇல்லையோ ஐயா! எழுத்தறியும் பெருமானே!31. நினையுடையாய் நீயன்றி நேடிலெங்கும் இல்லாதாய்மனையுடையார் மக்களெனும் வாழ்க்கையிடப் பட்டவமேஇணையுடையான் என்றிங் கெனையாள்வ துன்கடனேஎனையுடையாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே!