பதிவு செய்த நாள்
12
டிச
2015
12:12
அன்புள்ளம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
இந்த மாதம் குரு பகவான் 5ம் இடத்தில் இருந்துடிச. 20 வரை நற்பலன் கொடுப்பார். அதன் பிறகு சுமாரான பலனே தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சிஅதிகரிக்கும்.மனதில் உற்சாகம் ஏற்படும். பொருள், வசதிகள் பெருகும். சுக்கிரன் டிசம்பர்26-ந் தேதிக்கு பிறகு விருச்சிகத்திற்கு வந்து நன்மை தருவார். சூரியன்,புதன் தனுசுராசியில் இணைவதால் நன்மை தர இயலாது. செவ்வாயால் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தி அடையும். எடுத்த காரியம் வெற்றி அடையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். டிச. 28-ந் தேதிக்கு பிறகு சிற்சில தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அலைச்சல் ஏற்படும். மனைவி வகையில் தொல்லைஏற்படலாம். சூரியன்,புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பொறுமை தேவை. விருந்து, விழா என செலவு கூடும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்கள் வகையில் பிரச்னை வரலாம். ஆனால் அதை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஜன. 1,2,3ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு.
பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகளை டிசம்பர்28க்குள் கேட்டு பெறவும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். ஜனவரி 11,12ல் எதிர்பாராத பணபலன் கிடைக்கும். சிலருக்குஇடமாற்றம் ஏற்படும்.
கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சிறப்பான பலனை பெறுவர். சிலருக்கு பதவி கிடைக்கும்.
மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. மாத பிற்பகுதியில் சிரத்தை எடுத்து படித்தால் பலன் அதிகமாக இருக்கும்.
விவசாயிகளுக்கு நல்லமகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர்.முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு. புத்தாடை, நகைவாங்கலாம். உடல்நிலை சுமாராக இருக்கும்.
நல்லநாள்: டிச. 17,18,21,22,25,26, ஜன.1,2,3,4,5,11,12
கவன நாள்: ஜன. 6,7. சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: வெள்ளை, சிவப்பு.
பரிகாரம்: சனிக்கிழமை விஷ்ணுவுக்கு அர்ச்சனைசெய்யுங்கள். ஊனமுற்றவர்களுக்கு உதவுங்கள். ஞாயிற்றுக்கிழமை சூரியனை தரிசனம் செய்து கோதுமை தானம் கொடுக்கலாம்.