பதிவு செய்த நாள்
12
டிச
2015
12:12
அன்புள்ளம் கொண்ட கடக ராசி அன்பர்களே!
கடந்த மாதத்தை விட அதிக நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. சூரியன், புதன் தனுசு ராசியில் இணைந்து நின்று நற்பலன் கொடுப்பார்கள். செவ்வாய் டிசம்பர்28-ந் தேதி வரையும், சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார்கள். ராசிக்கு 5ல் உள்ள சனியால்நன்மை இராது. குரு டிச. 20 வரை இரண்டாம் இடத்தில் இருந்து நன்மை தருவார். அதன்பின் அவரால் நற்பலன் தர இயலாது.ராகு, ராசிக்கு ஜனவரி 8ல், 2-ம் இடமானசிம்மத்திற்கு வருகிறார். இது சிறப்பானது ஏன்று சொல்ல முடியாது. அவர் குடும்பத்தில் பிரச்னைகளை உருவாக்குவார். செலவு மிகவும் அதிகரிக்கும். கேது 8-ம் இடமான கும்பத்திற்கு வருவதாலும் சில பிரச்னைகள் வரலாம். எனினும், பக்தியில் நாட்டம் ஏற்படும்.பிற கிரகங்களால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். குடும்பத்தில் குதுõகலம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான வசதி கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கலாம். குடும்பத்தோடு புண்ணியத்தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய சொத்து வாங்கலாம்.
பணியாளர்கள் உயர்ந்த நிலையை அடைவர். கோரிக்கைகளை டிச. 28க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். சிலருக்கு புதிய வேலை தேடி வரும். புதனால் செல்வாக்கு அதிகரிக்கும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்கள் அடங்குவர். ஜன. 8,9,10ல் ஏதிர்பாராத வகையில்பணவரவு இருக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். நல்ல பணவரவு இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பார்க்காது பாடுபட வேண்டி வரும்.
மாணவர்களுக்கு புதன் சாதகமாக காணப்படுவதால் போட்டிகளில் வெற்றி காணலாம். ஆசிரியர்களின்
அறிவுரையை கேட்டு நடக்கவும்.
விவசாயிகள் மானாவாரி பயிர்கள், கீரை, காய்கறி மற்றும் பழ வகைகள் மூலம் லாபத்தை காணலாம்.
புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியாக காணப்படுவர். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரும்.
நல்ல நாள்: டிச. 21,22,23,24,27,28,29, ஜன. 1,2,3,8,9,10,11,12.
கவன நாள்: டிச 17,18. ஜன 13,14 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,3,9 நிறம்: வெள்ளை, பச்சை,செந்துõரம்
பரிகாரம்: பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.டிசம்பர் 28-ந் தேதிக்குபிறகு முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.