Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) பதவி உயர்வு வருது! கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வீடு வாங்க நேரம் வந்தாச்சு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வீடு வாங்க நேரம் வந்தாச்சு!

பதிவு செய்த நாள்

12 டிச
2015
12:12

சாதனை படைக்கத் துடிக்கும்சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன் டிச. 26ல் விருச்சிக ராசிக்கு மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பார். செவ்வாய் டிச. 28ல் இருந்து சாதக இடமான துலாம் ராசிக்குவருகிறார். குரு டிச.20ல், கன்னி ராசிக்கு மாறி நற்பலன் கொடுப்பார். அவர் ராசிக்கு 2-ம் இடத்திற்கு செல்வதால் ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறும். துணிச்சல்பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். ஜன.8ல் ராகு உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சுமாரான நிலைதான். வீண் அலைச்சல் ஏற்படலாம். கேது 7-ம் இடமான கும்பத்துக்கு வருகிறார். இதுவும் உகந்த இடம் என்று சொல்ல முடியாது. ஆனாலும்,எட்டாமிடத்தில் இருந்தது போல் கெடு பலன்கள்நடக்காது. மனைவி வகையில் பிரச்னையை தரலாம்.பிற கிரக நிலைகளின் படி குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும். கணவன்- மனைவி இடையே அன்னியோன்ய சூழ்நிலை இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். வீடு வாங்க யோகம் கூடி வரும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளின் பணவரவுக்கு பஞ்சம் இருக்காது. அரசு வகையில் இருந்த இடையூறுகள் டிச. 28க்கு பிறகு இருக்காது.அதுவரை வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஜனவரி 11,12ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு இருக்கும். கோரிக்கைகள்நிறைவேறும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம், புகழ், பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி தேடி வரும்.
மாணவர்கள் கல்வியில் அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியிருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைபடி நடந்தால் மதிப்பெண் உயரும்.

விவசாயிகள் பொருளாதாரத்தில் வளர்ச்சிகாணலாம். நெல், காய்கறி, கீரை வகைகள், சோளம், கேழ்வரகு போன்ற பயிர்கள் நல்ல விளைச்சலைகொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.

பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். கணவரின் அன்பு கிடைக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புத்தாடை, நகை வாங்கலாம்.

நல்ல நாள்: டிச 17,18,23,24,25,26,30,31, ஜன. 4,5,11,12,13,14.
கவன நாள்: டிச. 19, 20  சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4, 8  நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம்: ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். விநாயகர், பெருமாள் வழிபாடு முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar