பதிவு செய்த நாள்
12
டிச
2015
12:12
எதிலும் தனித்தன்மை கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
இந்த மாதம் தொடக்கத்தில் குரு, சுக்கிரன் நன்மை தருவர். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த செயலையும் சற்று முயற்சி எடுத்தேநிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால், முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது.குரு டிச. 20 வரை 9-ம் இடத்தில் இருந்து நன்மை தருவார். அதன்பின் அவர் தரும் பலன் குறையும்.ஜன. 8ல் நடக்கும் இந்த ராகு-கேது பெயர்ச்சியில் கேது 3-ம் இடமான கும்பத்துக்கு வந்து இறைஅருளையும் பொருள் உதவியையும் கொடுப்பார். உடல்உபாதைகளை குணமாக்குவார். ராகு 9-ம் இடமான சிம்மத்திற்கு மாறுவது சிறப்பான இடம் இல்லாவிட்டாலும், பின்தங்கிய நிலை மாறும். பிற கிரகநிலைகளின் அடிப்படையில், எந்த செயலையும் ஒன்றுக்கு பத்து முறை சிந்தித்து செயல்படுத்த வேண்டும். முக்கிய முடிவுகளை வீட்டிலுள்ள பெண்கள் வசம் ஒப்படையுங்கள் அது வெற்றிகரமாக நிறைவேறும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். அதற்காக அனாவசிய செலவு வேண்டாம். செவ்வாயால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதனால் வீட்டிலும்,. அண்டை வீட்டார் வகையிலும் சிறு பிரச்னை வரலாம். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.
பணியாளர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும்.அலைச்சல் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். முயற்சி எடுத்தால்தான் கோரிக்கைகள் நிறைவேறும். சிலர் இடமாற்றம் காண்பர்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் மாதத் தொடக்கத்தில் போட்டியாளர்களால் சிரமப்பட் வேண்டியிருக்கும். பணவிஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். இந்த மாதம் அதிக முதலீடு போடுவதை தவிர்க்கவும்.டிச. 23,24ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைப்பதுஅரிதாகவே இருக்கும்.
அரசியல் வாதிகள், சிறப்பான நிலையில் இருப்பர். புதிய பதவி கிடைக்கும்.
மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறலாம்.
விவசாயிகள் பொருளாதார வளத்தில் சிறப்படைவர். கால்நடை செல்வம் பெருகும். புதிய சொத்து பேசி முடிக்க வாய்ப்பு உண்டு.
பெண்களுக்கு நல்ல பணவரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை தருவர். விருந்து விழா என சென்று வருவீர்கள். கழுத்து நிறைய நகை வாங்கலாம்.
நல்ல நாள்: டிச. 17,18,23,24,25,26, ஜன. 1,2,3,4,5,8,9,10,13,14.
கவன நாள்: டிச. 27,28,29 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: மஞ்சள், வெள்ளை
பரிகாரம்: நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். பைரவரை வழிபடுங்கள். தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். இதனால் வாழ்வில் வளம் கிடைக்கும்.