ஸ்ரீரங்கம் கோவிலில் இருக்கும் ரங்கநாதர்ஆரம்பத்தில் அயோத்தியில் இருந்தார். ராமபிரானாலும், அவர்களது முன்னோராலும் வழிபடப்பட்டவர் இவர். இலங்கைக்கு கடத்தப்பட்ட சீதையை மீட்க உதவியவர்களுக்கு ராமன் பல பரிசுகளை வழங்கினார். அவர்களில் ராவணனின் தம்பி விபீஷணனிடம், உனக்கு என்ன பரிசு வேண்டும், எனக் கேட்டார். விபீஷணன் அவரிடம், நீங்கள் பூஜிக்கும் இந்த ரங்கநாதர் விக்ரகம் எனக்கு வேண்டும். நான் இலங்கைக்கு கொண்டு செல்கிறேன், என்று கேட்டான்.ராமனும் மறுக்காமல் கொடுத்து விட்டார். இலங்கை திரும்பிக் கொண்டிருந்த விபீஷணன், வழியில் காவிரியைக் கண்டான்.அவனுக்கு சுழலும் நீரில் குளிப்பதென்றால் அதீத ஆனந்தம்...காவிரி சுழன்றோடிய அழகு கண்ட விபீஷணன்சுவாமியை கீழே வைத்துவிட்டு நீராடினான். பின்பு, சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லை. ஆனாலும், ரங்கநாதர் அவனது நாடு இருந்த தென்திசை நோக்கி பார்வையைச் செலுத்தினார். பிற்காலத்தில், தர்மவர்மா என்றமன்னன், ரங்கநாதருக்கு கோவில் எழுப்பினான்.