பதிவு செய்த நாள்
29
டிச
2015
05:12
எழுத்து - 3 கானற்பால்மதி
பதி, பசு, பாசம் சோமப்பால்-அக்கினி
அறிவு-வாசி, சோதி சீவாத்மா-மூலத்தீ
ஸ்தூலம்-சரீரம் பரமாத்மா வெளி
சூக்ஷ்மம்-ஆவி பேசுமெழுத்து மனம்
காரணம்-பரம் பேசா எழுத்து வாசி
பதி-பரம் அந்தி-சூரியன்
பசு-வாசி சந்தி-சந்திரன்
பாசம் - கயிறு உச்சி-சுழுமுனை
சத்தி-தீ விட்டவிடம்
சிவம் வாசி ஆகாய வெளி
பூரணம்-சலம் தொட்டவிடம் வாசி
அடி-சந்திரன் மூல அனல் வாசி
நடு-சுழி வாசி-பிராணன்
முடி-சூரியன் பிராணம்-தீபம்
ரேசகம்-சூரியன் தீபம்-யோகம்
பூரகம்-சந்திரன்
கும்பகம்-சுழுமுனை
காமப்பால் -ரவி
மதம்-3
சாதி மதம்
பொருள் மதம்
கல்வி மதம் ஆகாயம்-சிவம்
குலம்-சக்குலம் சத்தி உடல்
சட்டை உரிப்பன 96 சிவம்-உயிர்
தத்துவம் 96 தீபம்-அறிவு
புளியால்-திரை வாசி மூல அனல்
உப்பால்-நுரை
பிராணம்-தீபம்
துவாறா 10 நந்தி-நேத்திரம்
மனோன்மணி மனம்
சீவத்துவாறா புருவமுனை சொர்க்க வீடு.
விகாரத் துவாறா பரகதி துவாதசாந்தம்
அங்கத் துவாறா அகாரம்-சத்தம்
விசேட சாதி துவாறா அதுவே ஆத்மா;
ஆசீர்மத் துவாறா அந்த யகாரத்தைத்
நாமத் துவாறா தியானிக்க அகத்
சம்ஸ்காரத் துவாறா திசரானார்
வேஷத் துவாறா ரவி மதி சுடர் மூன்றும்
கிரிகையாதி துவாறா ஒன்றானால் நவ நீத கிருஷ்ணனென புகலும்.
மணி 3 சந்திரனை நோக்க வெட்ட வெளிபோலக்
காணும் அது
ரவி சொரூபமணி சிவபதமாகும்
மதி-கமலினி ரவியைப் பார்க்க
சுடர்-அட்டமாசித்தினி இருதயத்தில் ரவிபிரகாசம்
பூமி-சக்தி தோன்றும் அது சத்தி பாதிபாகும்.
ஸ்தூல தேகத்தைப் போஷிக்க ஆகாரம் கொடுப்பது போல சூஷ்ம தேகமாகிய ஆவியாகிய வன்னிக்கு ஆகாரம் சந்திர
கிரணங்களின் அமுதத்தைக் கொடாததால் மூல அனலுக்கு ஆவி குறைந்து ஆயுள் க்ஷீணப்படுகின்றது.
குலம் என்பதும் சாதி என்பதும் முடிவாகப் பார்க்கில் மானிடப் பிறவியில் ஆண் பெண்ணாக விளங்குவதில், கொலை, களவு, கள், காமம், பொய்யாகிய ஐந்து பாதகத் தொழிலை நிக்கிரகித்துச் சத்துவ குணத்தோடு பரமமெனும்
பொருள் யாதோ காரணம் விவரமறிந்ததுதானே சூசனையென ஆத்தும விசாரணை செய்து முடிவை நாடி நிற்பவரே மேலாம் குலமெனப்படுவர். காமாதிகளைக் கைக்கொண்டு நன்று தீதெனத் தெரிந்து நடவாமல், புலால் மதுபானங்களையுண்டு, ஊன் உறக்க மைதுனமே பெரும் போகமமென வாட்நாட்களை மிருகாதிகளின் பாவமாயிருந்து கழிப்பவரே கீழக்குலமெனப்படுவார். மனத்தை ஒருமை செய்யாமல் காவிகாம்பிரதண்டு கமண்டல விபூதி பூசினும் துவாதச நாமந் தேகத்தில் சார்த்தினும், சதா கோயில் புகினும் ஐந்து கால சபதப சந்தியா வந்தனம் புரியினும், யாதொரு பயனுமிராது; தனக்குத்தானே வஞ்சக் கள்வனாவான்.
மணி கடல் யானை வார்குகுழல் மேகம்
மணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமவை பத்தும்
பணிந்தவாக் கல்லது பார்க்கவொண்ணாதே.
மானிட சரீரத்தில் தசவித நாதங்களும் பகிர்முக நோக்கில்லாமல் அந்தர் முக நோக்குடையவர்க்கு விளங்கும் சத்தம் ஓசை எனப்படும். அதுவே நாதமாகும். நாதம் ஆகாயத்திலுற்பவம், சத்தம் பிறந்த இடத்தில் சகல கலையுமுதிக்கும், நாத விந்து கலை எனப் புகல்வது, நாதமானது பெண்பாலிடமென்றும் விந்தையென்பது புருடனிடமிருப்பதென்றும் கூறுவது சகசமாயிருந்தாலும் ஆணிடத்திலும் பெண்ணிடத்திலும் நாத விந்திருப்பது உண்மையாயிருக்கும். இதை அனுபவத்தால் நிச்சயிக்கக் கூடும். குளவியானது கீடமாகிய புழுவை எடுத்துக் கொண்டு போய் மண் கூட்டிலடைத்துச் சிறியவழி விட்டு, அவ்விடம் குளவியானது தனது வால் முள்ளினால் பல தரமும் புழுவைக் குத்தி ரீங்காரமான பிரணவ நாதத்தை ஒலிக்க குளவி குத்திய துன்பத்தைச் சகியாத மகா துன்பத்துடன் நாத ஒலியைக் கேட்டிருந்த புழுவானது, அந்த வடிவம் நீங்கிக் குளவி வடிவம் பெற்றது. அது போல, மானிட தேகமுடையவரும் தமக்கு எதிரிட்டிருக்கும் மரணபாதைக்கு மிகப்பயந்து. சதா ஆகாய அமுசமான பிரணவ நாதமின்னதென்று ஆசிரியரிடம் கேட்டு மானத்தை அதில் இலயப்படுத்திருக்க சூக்ஷ்ம சரீரம் சித்தியாகும்.
எஞ்செய லாலெய்து மிவ்விதியு மல்லாது
தஞ்செய் லாலுண்டோ தந்தைவிதி எஞ்செயலோ
முன்னா ளமைந்த மொழிதவ றாதந்நாள்
இந்நா ளமைப்பது மில்.
எனவும்.
தந்தை விதியல்லவோ அண்ணே இந்த விதிகளெல்லாம்? எனவும்.
பாதகங்கள் போமென்றீர் பாவ மென்ன
பரமான என் குருவே! அருளிச் செய்வீர்:
சூதகமாம் நாதத்துள் விந்து பூத்த
சுகம்போல இருந்ததடா! அதுவே பாவாம்;
பேதையரைப் பெண்டாமை துனமே செய்து
பிறந்தாயே அவள் வயிற்றுட் சென்மித் தேதான்;
மாதாஎன் தாயே கொடும் பாவிநீ தான்
மகவாகப் புறப்பட்டால் ஞான மாமோ?
ஆதாரமாகிய ஆகாய அமிசத்தில் ஒரு கோடியே ஒன்பது லட்சத்து அறுபதாயிரங் கணமான 50 நாள் 414 நாழிகை, ஆயிரத்தறுநூறு நொடிக் கணக்காயப் புருடனிடம் சுக்கிலத்தில்.
மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிவிட்டு
மேவிய கூறது ஆயிர மாயினால்
ஆவியின் கூறுநூ றாயிரத் தொன்றே.
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலு மாமே.
அணுவுள் அவனும் அவனுள் அணுவம்
கணுவற நின்ற கலப்ப துணரார்
இணையிலி யீச னவனெங்கு மாகித்
தணிவற நின்றான் சராசரத் தானே.
புருடன் சுக்கிலத்தில் அணுவுக்கணுவாய் முன் கண்ட நாளனவாகக்கீட வடிவாய்க் கர்ப்பமிருந்து மோகங்கொண்டு ஸ்திரீயை நினைத்துப் புணர்ந்து ஸ்திரீ சுரோணிதத்தில் சுக்கிலத்திலிருந்து கீடம் சம்பந்தமாகும் முறையான ஆண் பெண்ணும் மவுனமுற்றால் மோசமில்லை; கருவங்கே தரிக்கும் பாரு. இரு மனமும் ஒருமையுடனிருக்க வேண்டும்.
அவ்வகை உத்தமப் புணர்ச்சியில் ஸ்திரீயின் மனமானது புருடன் வடிவமீது நோக்கமாயிருக்க வேண்டும்; வேறு ரூபத்தின் மீது மனம் வைக்கலாகாது ஒன்றான இருவரும் கூடியேயுற்று உள்ளம் கணவன்றன் மேலுறல் நான்றதான கணவன்றன் உருவமாம். நாடும் காதலிமேலந் நாட்டமுறில் நின்ற தாயுருவே வடிவாயுறும். நேசமாதுலன் போலிருந்தால் வழியன்றியே அவள் முன்னவன் பின்னவனாகு மைந்தன் கூறாமெனு நீளமறை. இவ்வண்ணமாக வடிவம் பொருந்தும் புருடன் கலை சூரியனாயிருந்தால், கரு ஆண் வடிவமும் சந்திர கலையாயிருந்தால், பெண் வடிவமும் பிருதிவி, அப்பு தேயு வாயு பூதியமாயிருக்கில் அவையவைகளுக்குரிய கணக்கின்படி ஆயுளமைவதாயும் இருக்கிறது. அப்படியமைந்த கருவானது 280 நாள் அல்லது 300 நாள் பெண் வயிற்றில் வளர்ந்து வெளிகண்டது. அவ்வகை சென்மித்த சிசு, எழுவிதப் பருவமடையும்; அதை ஏழு பிறவி என்றும் புகல்வர் அவை யாவன; புருடன் ஸ்திரீயை நினைந்து மோகங் கொண்டது 1: சம்பந்தமுற்றுச் சுரோணதத்தில் சம்பந்தமானவை. 2: கருப்பையில் வளர்ந்தது 3: வெளித்தோன்றிய குழந்தைப் பருவம். 4: வாலைப் பருவம். 5: எவ்வன காமாதிகளாலலைவுறும் பருவம். 6; நரை திரை மூப்புப்பிணி மரணப் பருவம், 7: இந்த ஏழு பருவங்களிலும் வடிவமும் குணமும் நடக்கையும் பேதங்களாகவேயிருக்கும் புருடன் ஸ்திரீ இருவருக்கும் மோகவுற்பவ விவரம்.
கேளப்பா மனமான வாயுக் கூடிக்
கெடியான சித்தமா காயம் பொங்கி
வேளப்பா வாங்கார சிகார மிஞ்சி
மேவுதற்குப் பெண்மேலே மோக மாகும்.
நாளப்பா ஐந்திற்கும் பலமே தென்றால்
நலம் பெறவே சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு;
தாளப்பா மனத்தோடே வியானன் கூடித்
தனியான நாதத்தி லபானன் றானே.
தானென்ற விந்துவினிற் சாமனன் கூடும்
தனியான சித்தத்தில் வியானன் கூடும்;
தானென்ற ஆங்காரங் கெர்ச்சிப் போடு
கலந்துநிற்கும் உதானனப்பா கண்டு கொள்;
வேனென்ற பத்துமொன்றாய் மனமுங் கூடி
மேவியவன் கலந்துவிந்து விழுகும் போது
மானென்ற மௌனபர வசமே யாவான்
மருவுகின்ற பெண்ணுக்கம் முறைதான் காணே.
ஒன்றான விந்துவிலே விட்டகுறை வந்து உருத்தரிக்கும், அவ்வுருவே அவனவளுமாவார் என்றும், தனது நல்வினை தீவினையளவாகப் பெண் கர்ப்பத்தில்தானே பிறவி எடுத்து அனுபவிக்க வேண்டுமென்றும் அனுபவிகள் கூறியது
மகாவாக்கியம்.
பிராண வாயு பித்தம் அக்கினி சலத்தில் அபானவாயு வாதம் மலத்தில் சமான வாயு அய்யம் சுழி விந்தில்.
தீயும் காற்றும் மலத்தில் சார, வாத வாயுவும் அக்கினியும், காற்றும், ஆகாயத்தில் சாரப்பித்தமுறும், சகலமும் காற்றும் சுழியில் சார சிலேற்பனமுறும்
வாசிமூலவிடம் ஐந்து: நாசிமுனை, சகஸ்திரம் பிடரி, நெஞ்சு, மூலம்
முத்தீயின் விவரம்: குதஸ்தானத்தீயொன்று, ருத்திர ஸ்தானத்தீயொன்று, புருவ மையச் சதாசிவ ஸ்தானத்தீயொன்று.
சந்திரசூரிய அக்கினி இடமாவன: மூலத்தில் அக்கினி மார்பில் சூரியன்: முடியிற் சந்திரன்.
உலவுமிடம் சூரியகலை நடக்கும்போது சுவாசம் பிட்ரி வழிச்சென்று வரும்; சந்திரகலை நடக்கும்போது 312 பாகமாகிய மூளையில் சென்று வரும். மந்திரங்கால் மதி முக்காலென்பது மந்திரம் சூரியன் கால் மதி சந்திரன் முக்கால் அங்குஷ்டப் பிரமாணமென்னும் அகத்தீசர் ஓர் அங்குலமுள்ள நேத்திர ஸ்தானமிருந்து ஆயிரத்தெட்டுக் கிரணங்கள் பொருந்திப் பகிர்முக நோக்காக யாவும் பார்த்ததும் தான சர்வ சாக்ஷியாய் விளங்கும்.
ஸ்தூல பஞ்சீ கரணம் ஆகாயமும் தேயுவும் மார்பு
பிருதிவியில் பிருதிவி அஸ்தி ஆகாய மப்பும் நாசி; பித்தம்
பிருதிவியில் அப்பு-மாமிசம் ஆகாயமும் பிருதிவியும் இருதயம்; அகங்காரம்
பிருதிவியில் தேயு சர்மம் வாயும் பிருதிவியும் கூடில்
பிருதிவியில் வாயு-நரம்பு இருதயம் பிராணன்
பிருதிவியில் ஆகாயம் ரோமம் வாயுவும் அப்பும் குதம்; அபானம்
அப்பினிலப்பு மூத்திரம் வாயுவும் தேயுவும்-கண்டம், உதானன்
அப்பினில் பிருதிவி உமிழ்நீர்
அப்பினில் தேயு வியர்வை வாயுவும் வாயுவும் சர்வ சரீரி, வியானன்
அப்பினில் வாயு உதிரம்
அப்பினில் ஆகாயம் சுக்கிலம் வாயுவும் ஆகாயமும் நாபி சமானன்
தேயுவில் தேயு-பசி
தேயுவில் பிருதிவி-தாகம் தேயுவும் ஆகாயமும் செவி
தேயுவில் அப்பு-நித்திரை தேயுவும் வாயுவும் - சரீரம்
தேயுவில் வாயு-ஆலிசம் தேயுவும் தேயுவும் - நேத்திரம்
தேயுவிலாகாயம்-சங்கமம் தேயுவும் அப்பும்-சிங்குவை
வாயுவில் வாயு-ஓடல் தேயுவும் பிருதிவியும்-நாசி
வாயுவில் பிருதிவி நடத்தல் அப்பும் ஆகாயமும் -சத்தம்
வாயுவில் அப்பு இருத்தல் அப்பும் வாயுவும் பரிசம்
வாயுவில் தேயு தத்தல் அப்பும் தேயுவும் பார்வை
வாயுவிலாகாயம் கிடத்தல் அப்பும் அப்பும் இரசம்
ஆகாயத்திலா காயம் மோகம் அப்பும் பிருதிவியும் கந்தம்
ஆகாயத்தில் பிருதிவி-ஆசை பிருதிவியும் ஆகாயமும் வாக்கு
ஆகாயத்தில் அப்பு-துவேஷம்
ஆகாயத்தில் தேயு பயம் பிருதிவியும் வாயுவும் பாதம்
ஆகாயத்தில் வாயு வெட்கம் பிருதிவியும் தேயுவும் பாணி
சூஷ்மபஞ்சீ கரணம்: பிருதிவியும் பிருதிவியும் குதம்
பிருதிவியும் அப்பும்-குய்யம்
ஆகாயமுமா காயமும்
நேத்திரம் அறிவு
ஆகாயமும் வாயுவும் கண்டம்
ஐவகை உற்பவம்: பிருதிவியினிடம் சாராயுசமான வித்துகளாம் புல் பூடு கொடி செடி மர முதலியவைகள்.
அப்புப் பூதம்: உற்பீஜம் பைனிடமாக மானிடம் பசு, ஆடு மிருகாதிகள்.
தேயு பூதம்: சுவேதசம், வியர்வை வெப்பத்தால் ஈ, போன், கீடம், கம்பளிப் பூச்சி, புழு.
வாயு பூதம்: அண்டசம் , முட்டையில் கோழி, வாத்து, பல்லி, ஓணான், சர்ப்பம், கோட்டான், கருடன்.
மந்திர பீசம்: ஆகாயம், இது மகான்களால் சிருஷ்டிக்கப்படும்.
இதில் ஓரறிவுடையவை புல், மரம், செடி: இவை பரிசமறியும்.
ஈரறிவு: சிப்பி, சங்கு, இவை பரிச ரசமறியும்.
மூவறிவு: கறையான், எறும்பு, இவை பரிச ரச கந்த அறியும்.
நாலறிவு: தும்பி, வண்டு, இவை பரிச ரச கந்த ரூபம் அறியும்.
ஐயறிவு: பறவை, மிருகங்கள், இவை சுத்த பரிச ரூபரச கந்தமறியும்.
ஆறறிவுடைய மானிடர்கள்: ஞானமாகிய அறிவும் பொருந்தியவர்கள்.
ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலமும் நீங்கில், ஆத்துமா அருளோடு கூடிய ஞானமாகும்.
ஒரு பாதையுமின்றித் தானாயிருப்பது பிரமம்; பிரமம் மாயையாகிய அவித்தையிற் பிரதிபலித்த போது சீவன்; சீவன் அவித்தையிற் கூடியபோது சுழுத்தி; சுழுத்தி அந்தக் கரணத்தில் கூடில் சொப்பனம்; சொப்பனம் ஐந்து இந்திரியத்தில் கூடில் சாக்கிரம் சாக்கிரம் 96 தத்துவங்களுடன் கூடில், விவகாரம்.
ஆச்சப்பா தேகமென்ற ஆதா ரத்தில்
அவத்தையென்ற அஞ்சையுமே சொல்லக் கேளு;
மூச்சப்பாலலாடத்திற் சாக்கிரந்தா னொன்று:
முனையான கண்டத்திற் சொப்பனந்தா னொன்று;
நீச்சப்பா மார்பின் கீழ்ச் சுழுத்தி யொன்று;
நிசமான வந்தியிலே துரிய மொன்று:
வீச்சப்பா விந்தின் மேல் துரியா தீதம்
விளங்கிநின்ற அவத்தையஞ்சும் கண்டு கொள்ளே;
விரசுகொண்டே ஆடுகிற சக்க ரத்தை
வினயம்கொண்டு பாராமல் வீணாய்ப் போன
பிரசைகளைக் கண்டதனா லேதுண் டப்பா?
பிலமான மூலமதில் மனத்தை வைத்தே
உரவான வாசியினால் மைந்தா மைந்தா!
ஊடாடும் சக்கரத்தை யுன்னி நாட்டத்
திரமாகச் சீவர் களைக் கதிகொண் டாடும்
தீர்க்கமுடன் கேசரியிலிருந்து பாரே.
களையான சீவகளை தீபம் போலே
கண்டதடா எண்ணெய்திரி மாண்ட போது
களையான சீவகளை யெங்கே போச்சு?
கனலொளியின் பூரணந்தா னெங்கே போச்சு?
களையான கதலிகுலை சாயும் போது
காரணமாய் முன்போலே பின்புண் டாமே.
களையான சீவகளை பக்கத் தேதான்
கண்வெடித்த கதையாச்சுச் சீவன் காணே.
தானாகித் தான்முடிந்த சூட்சந் தன்னைத்
தரணிதனி லறியாமல் தான்தா னென்றே
ஊனாகி நின்றதிரு உடலைக் காணான்
உடலில் நின்ற அட்சரத்தி னுறுதி காணாள்
ஆணாகி நின்ற திருவாசி காணான்
அமர்ந்துநின்ற வாசிதிரு நயனங் காணான்
வானாகி நின்றவடி முடியுங் காணான்
மதிகெட்டு விதியழிந்து மாளு வானே.
மாளுவது மிரண்டுவிதம் மைந்தா கேளாய்;
மகத்தான சீவகளை மாறும் போது
ஆளுவது பூரணமாய் அறிவோ டய்யா!
அடங்குவது பராபரத்தே அமைப்பே யாகும்;
சூளுவது நோயுடனே பாசம் சூழ்ந்தால்
சுளுவான மதிமயங்கி அலைவான் பாராய்;
காலுநிலை யறியாமல் அலைந்து கெட்டுக்
கானலிலும் நீரினலும் கரைந்து போமே.
ஆகையால், அந்தக்கரண வியாபாரங்களை நீக்கி, அந்தர்முக நோக்காய்ப் பேச்சுக்கும் மூச்சுக்கும் மத்தி, கண்ணுக்கும் காதிற்கும் மத்தி, கங்குல் பகலாகுமிடத்திற்கு மத்தி, இரவி மதிக்கு மத்தி அறிவிற்கும் மனத்திற்கும் நடுநிலையில் நின்றவர்க்கே மெய்ப்போதமுதயமாகும்.
நினைவை நீக்கி நோக்கியிடின் நிமல சொரூபந் தோன்றி விடும்;
நினைவை மேவி நோக்கியிடி னிலையில் உலகந் தோன்றிவிடும்;
நினைவில் உலகம் அறிந்ததுவும் நீங்கிச் சொரூபம் அறிந்ததுவும்
நினைவி னோக்கிற் றானில்லை; நிகழு மாயா மோகமதில்
தன்னை மறைத்த பந்தமதைத் தள்ளி நீங்கிற் றான்விளங்கும்;
தன்னை மறந்த தேபந்தம் தன்னை அறிந்த தேமுத்தி;
தன்னை விடவோர் பொருளில்லை; தானே பிரம மாயையும் பின்
தன்னை விடவே றாய்விளங்கா; தானே யாகி விளங்கிவிடும்.
க்ஷண சிருஷ்டிப் பிரளயம் தின சிருஷ்டிப் பிரளயமாகின்ற நினைத்தலும் மறத்தலும். நித்திரையிலே தன்னையே மறத்தலாகின்றபடி; மரண காலம் எதிரிட்டிருப்பது இன்ன நாள் என்று தெரிந்து அதற்குள் அடைய வேண்டிடும் பயனை அடையாத நமது இகபோக சுகமும் நடக்கையும் மனவி காரமும் யாது பயன் தரும்?
ஐம்புலனை வென்றவன் வீரமே வீரம், கடவுள் ஒன்றெனத் தெளிந்த பேரறிவே அறிவு, பிறர் ஏவாமல் உண்பதே வூண், தான் சாகாமல் கற்பதே கல்வி, ஆதலால், ஆதி சிருஷ்டி கால முதல் யோனியாசை கொண்டு யோனி மூலமாகவே இச்சை கொண்டபடி சென்மித்து வருகிறோம்.
அவ்வகை யோனி வழியாக அளவிறந்த சென்மங்கள் எடுத்தும் இப்போதாகிலும், பிறந்து விட்டேன்; இனிப் பிறவாதிருக்க வரந் தரவேண்டும், எனப் பட்டினத்துச் சுவாமிகள் கேட்டபடி இனிப் பிறவி பெறாவண்ணம் வேண்டுமெல்லவா? தேகம் நரை திரை மூப்புச் சாக்காடு பெற்று நசிப்பது சித்தம், தேகத்திலிருந்த சத்து எக்காலமும் நசிப்பதில்லை என்றனைவரும் புகல்வது பழமொழியாய் இருந்தாலும். அது அனுபவத்தில் சித்தாந்தமாக வேண்டும்.
இப்புவி அத்திப்பழம் போலும்பேரண்டம் அதற்குள் அமைந்த வித்துகள் போல்வன சிற்றண்டங்கள், பேரண்டம் ஆயிரத்தெட்டுக் கூடியது ஒரு புவனம்; இவ்வகை கொண்ட புவனம் 2214 கூடியது. ஒரு சாகரம் சாகரம் ஏழு கூடியது. ஒரு பதம்; இப்படி 844 பதம் கூடியதைப் பிரபஞ்சமென மேலோர் கூறினர்.
தரணி சலனம்கனல் கால் தக்க வானம்
அரணிய பானு அருந்திங்க ளங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநேறி தானே.
சிவம்சத்தி நாத பிந்து சதாசிவம் திகழு மீசன்
உவந்தருள் ருத்தி ரன்மா லயனிவை யொன்றி னொன்றாம்.
பவந்தரும் அருவம் நாலின் உருவம்நல் லுபாய மொன்றாய்
நவந்தரு பேத மகா நாதனே நடிப்ப னென்பர்.
பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், உகாரநாத ரவி, மகார விந்து சந்திரன், ஓங்கார மகமேரு சுழுமுனை ஆக அஷ்ட மூர்த்தியாயும் விளங்குபவர். கடவுளென வேதம் கூறும்.
ஆச்சுதே அறிவொன்றின் விசாரணையே
அனைத்தையுமே பார்த்திருந்தே அகண்டந் தன்னில்
கோச்சுதே குருவாய்த்தத் துவங்களாகிக்
கொடியதீ வினையுநல் வினையு மாகிப்
போச்சுதே பெண்ணாணாய்ப் ப்ரபஞ்ச மாகிப்
புகழரிய நிற்குணநிர் மலமு மாகித்
தீச்சுதே சிவமாகிச் சீவ னாகிச்
செழுஞ்சுடரின் கதிரொளியாய்ச் சிறந்த வாறே.
எட்டுத் திசையும் பதினாறு கோணமு மெங்குமொன்றாய் முட்டித் ததும்பி முளைத்தோங்கும் சோதியை மூடரெல்லாம் கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர் கருத்தில்வையார் பட்டப் பகலை யிரவென்று சொல்லுமப் பாதகரே.
மேலோர் முன் குறித்த வாக்கியங்கள் உண்மையென விளங்குவனவேயாம். ஐயமின்றித் தெய்வவுருத் தியானித்தாலதுவாம்; அருவுருவைத் தியானித்தால் அட்டமூர்த்தியுமாம்; பொய்யா இரண்டையும் தவிர்த்துத் தானாயிருந்திடில், பூரணமாம்; சீவனெதிர்ப் பொருந்துமதுவாயின் மையலுறு மனம் விடயத்தாசையுற்றே அது வாய் மரண செனனமும் விளைந்தவாறே தென்றே உணர்ந்து மெய்யறிவே தானாகப் பாவித்தால் அதுவாய் விளங்குவர் யாவரும்; செனியா வீட்டையுமெய்துவாரே.
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயனின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு.
வாரசரம்: ஞாயிறு, செவ்வாய், சனி வலநாசியில் சூரிய கலையாகவும், வெள்ளி, திங்கள், புதன் இட நாசியில் சந்திர கலையாகவும்; பூர்வ பக்ஷ குருவாரம் சந்திர கலையும் அமரபக்ஷ குருவாரம் சூரிய கலையுமாகவும் காலை 4 மணிக்கு நடக்க வேண்டும். அவ்விதம் நடந்தால், தன் காரியங்களனைத்தும் சித்தியாகும். அவ்வகை நடவாமல், பேதமாய்ச் சூரியன் நடக்கவேண்டிய தினம் சந்திரனும் சந்திரன் நடக்க வேண்டிய தினம் சூரியனுமாய் நடந்தால், அடியிற் காணும் பலனாக நடக்கும்.
ஞாயிறு சந்திரன், சளி இருமல், திங்கள் சூரியன், சலதோஷம்; சுற்றத்தார்க்குக் கேடு, செவ்வாய் சந்திரன், சுரம் சண்டை சாவு; புதன், சூரியன், நீரேற்றம் தலைக்குத்தல், தீங்கு, வளர்பிறை, வியாழன், சந்திரன், தேக நோய், வெள்ளி, சூரியன், கண் காது நோய்,வெளியூர்ப் பிரயாணம்; சனி சந்திரன், சீதள சன்னியாகும்.
சந்திர சூரியர் இரு கலையிலும் ஐம்பூதம் நடப்பதுண்டு பிருதிவி நிறம் பொன்மை, தித்திப்பு, அப்பு வெண்மை, துவர்ப்பு; தேயு செம்மை உவர்ப்பு, வாயு கருமை, புளிப்பு; ஆகாயம் படிகம், கசப்பு; பூர்வ பக்ஷத்தில் குரு பிருதிவி சுக்கிரன் அப்பு; குரு தேயு; புதன் வாயு சனி ஆகாய பூதியமாகக் கொள்க.
ஞாயிறு ஆந்தையாகிய அப்பும், திங்கள் செவ்வாய் வியாழன் காகமாகிய தேயுவும், புதன் வல்லூறாகிய பிருதிவியும் வெள்ளி கோழியாகிய வாயுவும், சனி மயிலாகிய ஆகாயமும் பூதியமாக நடக்க மிக உத்தமம்.
பூதியங்கள் பிருதிவி அப்பு நடந்தால் சத்வகுணம் தேயு ராசதமாகிய தேயுவும் புதன் வல்லூறாகிய பிருதிவியும் வெள்ளி கோழியாகிய வாயுவும், சனி மயிலாகிய ஆகாயமும் பூதியபமாக நடக்க மிக உத்தமம்.
பூதியங்கள் பிருதிவி அப்பு நடந்தால் சத்வகுணம் தேயு ராசதமாகிய கோபமாங்காரம் பெண்ணிச்சை வாயு அலைவுறும்; ஆகாயம் பர இச்சையை நாடும். காலை படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போதே சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டு எழுந்திருக்க வேண்டும். ஆகவேண்டிய காரியங்களுக்குப் போகும்போது இரவியில் பிருதிவி அப்பு நடக்கச் சென்றால், தாமதத்தில் பலன் சித்திக்கும் படுக்கும்போது இடக்கையைக் கீழ் வைத்து வலக்கையை மேலாக வைத்துக் கால் நீட்டிப் படுக்க வேண்டும். அவ்வகையில் படுக்கும்போது மனத்தைப் பலவாறு சிந்தனையில் செல்லவிடாமல் சுவாச மீது செலுத்தியிருக்க வேண்டும். அவ்வகை அப்பியாசம் செய்து வருகையில் சொப்பனாதி அவஸ்தைகள் நீங்கி, அந்தர் முக விவகாரங்கள் விளங்கும். இவ்வகை நடப்பதுமன்றி, வயிற்றில் ஆகாரமில்லாமலிருக்கும்போது பசி அதிகமாயிருப்பதென்று சொல்வது அப்போது மேற்கூறியபடி படுத்திருந்து பார்க்கப் பசி எழும்பிய பரமிடம் நன்றாகத் தோன்றும். அமாவாசைத்தினக் காலை இரவியை இராகுவும், பருவத்தின் சந்திரனைக் கேதுவும் மறைப்பது போல நமது இரவி மதியை இராகு கேது சாயை மறைப்பதால், மனத்தை இருளாகிய மாயை மூடியது. சந்திரன் மனத் திடமும் சூரியன் நேத்திரத்திலுமிருப்பதால் இரவியிடம் மதியை செலுத்த மதிக்குச் கிரணங்கள் குறைவுபடாமல் அறிவு உதயமாகும்.
ஆகாயமும் வாயுவும் கலந்திருக்கின்றன. மண்ணும் சலமும் கலந்திருக்கின்றன. அக்கினி மத்தியமாக நின்றது; மாமிச உதிரசலம் ஒன்றாயிருக்கிறது. சரமாகிய வாயு ஆகாய வெளியில் சம்பந்தமாயிருக்கிறது. அக்கினி பொது நிலையாய் நின்றது.
தானென்ற சித்தர் முதல் முனிவர் ரிடிகள்
தன்மயமே தானாகத் தவமே செய்து
ஊனென்ற உடல் வெறுத்துப் பசியடக்கி
உதித்தகலை வாசியென்ற தார கத்தால்
வானென்ற ஆகாச வெளியில் சென்று
மகத்தான சோதியுடன் சோதி யானார்;
ஏனென்று வந்ததுவும் சோதி சோதி
எங்கும்சிவ மயமான சோதிதானே.
சோதியென்ற சோதியிலே சோதியானார்;
சூழ்ந்ததடா அண்டமதில் நன்றாய்ப் பாரு;
ஓதியதோர் மந்த்ரகலை சோதி யெல்லாம்
ஒளிவிளக்காய் நின்றதடா அங்கே பாரு;
நீதியுடன் பார்க்கையிலே அண்டந் தன்னில்
நிறைந்துநின்ற நட்சத்ர சோதி யெல்லாம்
ஆதியென்ற நாதாக்கள் காந்தி காந்தி
அண்டமதில் சூழ்ந்ததடா அங்கே பாரே.
ஸ்தூல தேகம் சக்தி சந்திரராம், இதில் உயிர்ப்பாகிய உயிர் சூரியர் சிவமாகும்.பிறவி குரு நாசியிடமாக வாசனையறிதலும் அப்புச் சுக்கிரர் நாவிடம் சுவையறிதலும் தேய அங்காரகர் நேத்திரமிடம் ரூபமறிதலும் வாயு புதன் சரீரத்தில் பரிசமறிதலும் ஆகாயம் சனி செவியினிடம் ஆகாய சத்தமறிதலுமாகும். இராகு கேது சாயையென்றும் அவை குதம் குய்யம் இத்தானனமிட மிருப்பனவென்றும் வேதம் புகலும்
கடினமென்று தள்ளாதே வாசி யோகம்
கண்மூக்கு மத்தியிலே கருதிப் பாரு;
துடிமிகுந்த சுழுமுனையி னூடு தொக்குச்
சூரியனும் சந்திரனும் ஒன்றாய்ப் போகும்;
குடியிருப்புச் சாக்கிரத்தின் கோட்டை யாச்சு;
கோடானு கோடியுகம் வாழ லாச்சு;
நொடிநிமைக்கும் நேரமல்லோ பிரமன் வாழ்க்கை?
நுண்ணிமையாய்ப் பார்த்தறிந்து நுடங்கு வாயே.
சாக்கிர பகிர்முக விவகாரங்களிலிருந்து நித்திரை சொப்பனத்தில் அநேக விஷயங்களைக் கண்டதாயும். செய்ததாயும் சென்றதாயும் நடத்தியதாயும் அனேகமாய்க் காண்கின்றோம். நித்திரை நீங்கிய பிறகு யாதொரு பயனையும் அடையாதவர்களாகின்றோம். அவைகளன்றி ஒரு பெண்ணைக் கூடிச் சம்போகம் செய்ததாகக் காண்கிறோம். அப்படிக் கண்டு நித்திரை நீங்கிய பிறகு ஸ்கலிதமான விந்தைப் பிரத்தியக்ஷமாகக் காண்கின்றோம்.
இதைப் புத்திமான்கள் அறிவு முன்னிலையில் யூகமாய் யோசிக்க விந்தின் செயலும் பெருமையும் அறிந்து அதில் தேறும் அனுபவ சித்தாந்த நிலையில் சதா ஆனந்த பரவசராய் விளங்குபவர்; இது வேத சம்மதமாகவிருக்கும்.
மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டிடில்
ஓயா இருபக்கத் துள்வளர் பக்கத்துள்
ஏயாவெண் ணாளின்ப மேற்பனி மூன்றிரண்
டாயா அபரத்து ளாதிநாள் ஆறாமே.
ஆறைந்து பன்னொன்று மன்றிச் சகமார்க்கம்
வேறன்பு வேண்டுவோர் பூவரிற் பின்னந்தோ
டேறும் இருபற் தொருநா ளிடைத்தோங்கும்
ஆறின் மிகுத்தோங்கும் அக்காலம் செய்யவே
செய்யும் அளவில் திருநான் முகூர்த்தமே
எய்யுங் கலைகாலம் இந்து பருதிகால்
நையு மிடத்தோடி னன்காம நூல்நெறி
செய்க வலமிடந் தீர்ந்து விடுக்கவே
கலக்குநாள் முன்னாள் தன்னிடைக் காதல்
நலத்தக வேண்டிலந் நாரி யுதரக்
கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை
விலக்கு வனசெய்து மேலணை வீரே.
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதலைந்து மீரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதலுச்சி யுள்ளே யொளி த்தே;
மாத ரிடத்தே செலுத்திலு மவ்விந்து
காதலி னால்விடார் யோகங் கலந்தகூர்;
மாத ருயிராசை கைகொண்டே வாடுவர்
காதலர் போன்றங்ஙன் காதலாஞ் சாற்றிலே.
மூலாக்கினி பசித் தீபாக்கினி கோபாக்கினி, ஸ்திரீ தாபாக்கினி, யோக ஞானாக்கினி என்னும் இவற்றுள் ஆதியுமந்தமும் தவிர மற்ற மூன்று அக்கினியும் உற்பவமாய்த் தோன்றலை யாவரும் சரீரத்தில் கண்டிருக்கிறோம்.
உரமடி மேதினி யுந்தியி லப்பாம்;
விரவிய தனமுலை மேவிய கீழங்கி
கருமுலை மீமிசை கைக்கீழிற் காலாம்;
விரவிய சுந்தர மேல்வெளி யாமே;
சத்தமுஞ் சத்த மனமும் மனக்கருத்
தொத்தறி கின்ற விடமும் அறிகிலர்
மெய்த்தறிகின்ற விடமறி வாளர்க்கு
அத்த னிருப்பிடம் அவ்விடந் தானே
அங்கி மதிகூட வாகும் கதிரொளி;
அங்கி கதிர்கூட வாகும் மதியொளி;
அங்கி சதிகதிர் கூடவத் தாரகை
தங்கி யதுவே சகலமு மாமே.
பத்து மிரண்டும் பகலோ னுயர்கலை
பத்தினொடாறு முயர்கலை பான்மதி
ஒத்தநல் லங்கிய தெட்டெட் டுயர்கலை
அத்திற னின்றமை யாய்ந்துகொள் வீரே
மேலாம் பதத்தையளிக்கும் பூரண அக்கினியை நாம் கேவலவிடயங்களிற் செலவிட்டு வாழ்நாட்களைக் கேவலப்படுத்துகின்றோம். அவ்வகை செய்யினும் அதனால் அனேக வியாதி அனுபவிக்க நேரிடுகின்றது.
உண்ணும்போ துயிரெழுத்தா லுயிரை வாங்கி உறங்குகின்ற போதெல்லா மதுபோலாகும்; பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தப்பா! பேணியுயிர் மேல்வாங்கு என்று மேலோர் செப்பியதை நான் ஏன் அனுபவத்தில் கொண்டுவரக் கூடாது?
விந்து அதிகமாய்ச் செலவழிப்பதில் பிணி மூப்புச் சாக்காடு எளிதிலடையக்கூடும். ஆகாரத்திற் பிரிந்த அன்ன ரசமானது. உதிரமாய், 7 ஆம் நாள் சுக்கிலமாகின்றதை விரயம் செய்யாமல் மாதத்தில் இரண்டு தரம் ஸ்திரீ பூர்வ காலத்தில் பயன்படுத்தும் தினம் சையோகிப்பதில் அவ்விதம் தரிக்கும் கருச்சிசுவானது. ஆயுள் விர்த்தியும் தேக திடமும் பெற்றுப் பிணியில்லாமலும் இருக்கும்.
உந்தியிலிருக்கும் உதான வாயுவால் காமம் கண்ட ஸ்தானக்குழியிடமிருந்து சமான வாயுவானகி கமலப் பிறை சொலிக்கும் ஸ்தானமடையுமாகில், கபால சூலையிடி, அசதி வயிற்றிரைச்சல், பேதி, நாவுலரல் முதலிய வியாதி புருடருக்கும் ஸ்திரீக்கு வயிற்றுநோய் தேக வெளுப்பு, சூதக வாய்வு முதலியவும் நேரும்.
ஓமென்ற மூலகாண பதியே காப்பு
உண்மையுடன் நடுமனைவி லுகந்து நின்றே
ஆமென்ற அமுதகலை யுள்கொண்டேதான்
அடங்கவந்த மனோமணியின் கிருபை யாலே
ஊமென்ற வுண்மைதனை மவுன மாக
உருப்பெற்றுக் கருப்பெற்றே யுறுதி பெற்றுத்
தாமென்ற மதிதனையே ரவியில் தாக்கச்
சச்சிதா னந்தமென்ற ஆதி காப்பாம்.
புருவமென்ற சுழுனையிலே மைந்தா கேளு
போதமென்ற அருள்ஞானச் செந்தீப் பற்றித்
திருவிருந்த மாளிகையில் தீபங் காணும்
செங்கமலக் கண்ணாலே நன்றாய்ப் பாரு;
குருவிருந்த இருதயமாம் முக்கோ ணத்தில்
குவிந்துமனக் கண்ணாலே தன்னைப் பார்த்தால்
கருவிருந்த பதியதுதான் மைந்தா மைந்தா!
கண் காணத் தோன்றுமடா கருவைப் பாரே
விண்ணைப்பார் தன்னைப்பார் மண்ணைப் பாரு
மேன்மைபெறு குருவருளை மேவிப் பாரு;
பெண்ணப்பார்த் தலையாதே; பெண்தான் தேகம்
பிரியமுடன் தேகமதைப் பேணிப் பார்த்தால்
கண்ணப்பா துலங்குமடா! அந்தக் கண்ணால்
காணலாஞ் சித்தவெகு கண்ணில் காணும்.
மண்ணப்பா என்றசடந் தன்னைப் பேணா
மாந்தருக்கு மென்னவரும் மண்தா னாமே.
புரண்டுமனம் நிலையாத பித்த ருண்டு;
புராணநிலை யறியாத மூட ருண்டு;
முரண்டுடனே முரடுகட்டி வளையா ருண்டு;
மோகமென்ற மாய்கையிலே திரிவா ருண்டு;
திரண்டகோள் முனிநுனியை அறியா ருண்டு;
செகத்திலிப் படியதிகஞ் செப்பப் போமோ?
அருண்டகண்ணு மிருண்டகண்ணும் அறியாப் பாவி
அடக்கமென்ற காவியத்தை அறிந்து பாரே.
தன்னிலையைத் தானறியா மூடர் காணும்
சாத்திரத்தின் பயனறியாய்ச் சண்டி மாடு;
கண்ணறிந்து விண்ணொளியைக் கருதிப் பார்க்கக்
கருத்துடனே வாசிநிலைகாலைக் காணா;
எண்ணிறைந்த அட்சரத்தி னியல்பு காணார்;
எட்டிரண்டு மறியாமல் ஏக மென்பார்;
விண்ணிறைந்த ஏகபரர் பரந்தான் மைந்தா!
மெய்ஞ்ஞான மானதிரு விளக்குத் தானே.
மகான்கள் வாக்கிய அனுபவத்தைப் பெறாமல் வாய் மதமாய்ப் பேசினவர்கள் பெருங்கடலும் சிறு குடலும் புரண்டு மகா துன்பமடைவார்கள். மகான்களைத் தரிசிக்க வேண்டிய அந்தர்முகமாய் அடியிற்கண்டபடி. தியானிக்க அவர்கள் பிரத்தியக்ஷமாய்த் திருவருள் பாலிப்பார்கள்.
செய்ததமிழ் தனையறிந்து பதினெண் பேரைச்
செம்மையுடன் காண்பதற்கு மூலங் கேளு;
சைதன்ய மானதொரு தன்னைப் போற்றிச்
சதாகாலம் ஓம்சிங்ரங் அங்சிங் கென்று
மெய்தவறாகப் பூரணமா யுருவே செய்தால்
வேதாந்தச் சித்தரைத்தான் வசமாய்க் காண்பாய்;
உய்தமுடன் அவர்களைத்தான் வசமாய்க் கண்டால்
உத்தமனே! சகலசித்துக் குதவி யாமே.
புரியட்டமாவன; சடம், பிரமன் கூறு; உதிரம்; மாலின் கூறு; இதில் சூட்சுமமாவன; சிகரம் தீ, சீவன்; வகரம் காற்று மகேசன் யகரம் ஆகாயம் சதாசிவம் விந்துநாகம் சத்தி சிவன், விராட்டு, பரை ஆக8. இதன்மீது வெளி பாழ் ஒளி பாழ், வெளியொளிபாழ் இவைகள் கடந்து, உள் மனையாளிடமென்றும் அவ்விடமிருப்பவர், சிவயோகிகளென்றும் மறை கூறும். இவ்வனுபவம் பெறுவது தக்க ஆசான் கிடைத்ததும் அவரது சாயைபோல அவருடனிருந்து, சதா அவரால் பெற்ற திருவருள் நோக்கத்தில் நெடுங்காலம்மிருப்பவர்களுக்கு அமையும் பதமாகும். ஆகிலும் அனைத்திற்கும் மனமே முன்னிலைக் காரணமாயிருக்கிறது. மனம் அலைவுறாதிருக்க வேண்டும். மனமானது எப்போதும் ஒன்றை நாடியே நிற்கும். அசைவற்று நிற்கும் சுபாவம் அதற்கில்லை நன்மார்க்கத்திலேனும் துன்மார்க்கத்திலேனும் செல்லுவது மனமாயிருக்கிறது. மனத்தசைவை நிறுத்துவதே நல்லோர் கடமை.