Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்வி தரும் விரதம்! தமிழ்க் கடவுள் முருகன் பெயர்கள்! தமிழ்க் கடவுள் முருகன் பெயர்கள்!
முதல் பக்கம் » துளிகள்
புதுவீட்டில் பால் காய்ச்ச ஆசையா?
எழுத்தின் அளவு:
புதுவீட்டில் பால் காய்ச்ச ஆசையா?

பதிவு செய்த நாள்

02 பிப்
2016
02:02

திருச்சி மலைக்@காட்டைதாயுமான சுவாமி, மட்டுவார் குழலம்மை மீது சம்பந்தர் பாடிய தேவாரப் பாடலை தினமும் பக்தியுடன் படித்து வந்தால் வீடு கட்டும் பணி சிறப்பாக நிறைவேறி விரைவில் கிரகப்பிரவேசம் செய்யும் யோகம் உண்டாகும். தாயாரின் உடல்நிலை சீர் பெறவும், பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்கவும், உறவினர், நண்பர்களால் நன்மை ஏற்படவும் இதைப் படிப்பது நல்லது.

நன்று உடையானை தீயது இலானை நரைவெள் ஏறு
ஒன்று உடையானை உமை ஒருபாகம் உடையானைச்
சென்று அடையாத திரு உடையானைச், சிராப்பள்ளிக்
குன்று உடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே.

 கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான்
செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி
வெம்முக வேழத்து ஈர்உரி போர்த்த விகிர்தா, நீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழி அன்றே.

மந்தம் முழவம் மழலை ததும்ப, வரை நீழல்
செந்தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம் மலர்கள் சடைமேல் உடையார், விடைஊரும்
எம்தம் அடிகள், அடியார்க்கு அல்லல் இல்லையே.

துறை மல்கு சாரல், சுனைமல்கு நீலத்து இடைவைகிச்
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளிக்
கறை மல்கு கண்டன், கனல் எரி ஆடும் கடவுள்ளம்
பிறை மல்கு சென்னி உடையவன், எங்கள் பெருமானே.

கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்
சிலைவரை ஆகச் சென்றன ரேனும், சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்
நிலவரை நீலம் உண்டதும், வெள்ளை நிறம் ஆமே!

வெய்ய தண்சாரல் விரி நிற வேங்கைத் தண்போது
செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்,
தையல் ஓர் பாகம் மகிழ்வர், நஞ்சு உண்பர்; தலைஓட்டில்
ஐயமும் கொள்வர்; ஆர் இவர் செய்கை அறிவாரே.

வேய் உயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும்
சேய் உயர் கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்,
பேய் உயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்,
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று; ஆகாதே.

மலைமல்கு தோளன் வலி கெட ஊன்றி, மலரோன்தன்
தலை கலன் ஆகப் பலிதிரிந்து உண்பர்; பழி ஓரார்;
சொல வல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்
சில அல போலும், சிராப்பள்ளிச் சேடர் செய்கையே.

அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்
கரப்பு உள்ளி, நாடிக் கண்டிலரேனும், கல் சூழ்ந்த
சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்பு உள்ளீர்; உம்மை ஏதிலர் கண்டால், இகழாரோ?

நாணாது உடை நீத்தோர்களும், கஞ்சி நாள் காலை
ஊணாப் பகல் உண்டுஓதுவார்கள், உரைக்கும் சொல்
பேணாது, உறுசீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார்
சேணார் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே!

தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்,
ஞானசம்பந்தன் நலமிகு பாடல் இவை வல்லார்,
வானசம்பந்தத் தவரொடும் மன்னி வாழ்வரே

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar