Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

குரூரம்மா சியாவாச்வர் சியாவாச்வர்
முதல் பக்கம் » பிரபலங்கள்
பிருஹத்தபா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 பிப்
2016
17:26

கிருதயுகத்தின் கடைசி. கங்கையிலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் சத்யவிரதம். அங்கு  என்ற துறவி ஹரி கதாகாலட்சேபம் செய்து வந்தார். கிருஷ்ண லீலைகளை பாவத்தோடு, அப்போது நடப்பதுபோல் சொல்வார். புண்ணியதாமா என்ற அந்தணர் தம்பதியர் நாள் தவறாமல் கதை கேட்கப் போவர். அதோடு, தமது வீட்டுக்கு புதிதாக விருந்தினர் வந்தாலும் முகம் கோணாது உபசரிப்பர்.

ஒருநாள் கங்கையில் நீராட வெகு தூரத்திலிருந்து இரு பயணிகள் வந்து, புண்ணியதாமாவின் இல்லத்தில் தங்கினர். குளித்துவிட்டு சாப்பிட அமர்ந்தனர். தலைவாழையிலையில் அன்னமிட்டார் புண்ணியதாமாவின் மனைவி. அப்போது பயணிகளில் ஒருவர், நீங்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள். கங்கைக்கு மாதமொரு முறையாவது சென்று குளிப்பீர்கள் என்று பெருமூச்சு விட்டார். புண்ணியதாமா புன்னகைத்தபடி, நாங்களும் போக வேண்டுமென்று தான் நினைக்கிறோம். ஆனால், வருஷம் முழுவதும் விருந்தாளிகள் வரவு. அதிதி உபசாரம் பிரதானமில்லையா? அதற்கான வருமானமீட்ட வயலைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அந்தி சாய்ந்தால் பிரவசனம் கேட்கிற ஆசை! மனுஷ உடம்புதானே! அசதி வந்து விடுகிறது. இங்கேயிருந்து கங்கை ஆறு மைல்தான்! வழிப்போக்கர்கள் கதவு பூட்டியிருக்கிறதென்று சேர்ந்து விடக் கூடாதல்லவா? அதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. என்று புண்ணியதாமா கூற, கையை உதறிவிட்டு இருவரும் எழுந்தனர்.

தீர்த்தக்கரைப் பாவியா நீங்கள்? ஆயிரம் மைலுக்கு அப்புறம் இருப்பவர்கள். காசில்லாதவர்கள் கூட தள்ளி, முள்ளி கங்கையில் நீராடுவதை ஜன்ம சாபல்யமாக வைத்து வருகிறார்கள். இங்கே தங்குவதே பாபம். உங்கள் வீட்டில் சாப்பிடுவதே தோஷம். இந்தப் பாபத்தைக் கங்கையில் ஸ்நானம் செய்துதான் தொலைக்க வேண்டும் என்று வார்த்தைகளைக் கொட்டி விட்டு கங்கையில் நீராடச் சென்றனர். அங்கோ, ஒரு துளி நீரோ, நீராடுபவர்களோ அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. யாரிடமாவது விசாரிக்கலாமென்றால் பாஷை தெரியாதவர்கள் மட்டுமே பார்வையில் தென்பட்டனர். கங்கையின் உற்பத்தி ஸ்தானம்வரை அலைந்ததுதான் மிச்சம். கங்கையின் முகத்துவாரத்தில் மனமுருகிப் பிரார்தித்தனர். தாயே! நாங்கள் ஏதோ குற்றம் செய்திருக்கிறோமென்று தெரிகிறது. எதுவாயினும் மன்னிக்க வேண்டும் என கண்ணீர் விட்டனர்.

நீங்கள் மகா புண்ணியசாலிகளான புண்ணியதாமா தம்பதியை அவமதித்தீர்கள்! அவர் பாதத்தூளி பட நான் காத்திருக்கிறேன். எங்கு ஹரி கதை நடக்கிறதோ, எங்கு அதிதி உபசாரம் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் நதி தேவதைகளான நாங்கள் பாவிகள் எங்களிடம் விடும் பாபங்கள் தீர போகிறோம். பகவத் பக்தர்களை நிந்தனை செய்த உங்கள் பாபம் தொலைய இரண்டாண்டு காலம் ஹரி கதை கேட்டு விட்டு வாருங்கள். பிறகே நான் உங்கள் கண்களுக்குத் தெரிவேன் என கங்கையின் குரல் கேட்டது. இருவரும் புண்ணியத்தாமாவை தேடிச் சென்று அவர் பாதம் பணிந்து நடந்ததைக் கூறினர். இரண்டாண்டுகள் பிருஹத்தபாவின் காலட்சேபத்தைக் கேட்டனர். பிறகு எல்லோருமாகச் சென்று கங்கையில் நீராடினர்.

 
மேலும் பிரபலங்கள் »
temple

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.