பதிவு செய்த நாள்
16
மார்
2016
11:03
திருப்பூர் :ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், யாக சாலை பூஜைகள் நேற்று துவங்கின.திருப்பூர், விசாலாட்சியம்மன் உடனமர் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. யாக சாலை கலச பூஜைகளுக்காக, கைலாயம், மானசரோவர், அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம், காசியில் இருந்து கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளின் தீர்த்தம் மற்றும் ராமேஸ்வரம், கொடுமுடி, ள்ளியங்கிரி மலை, பவானி, பேரூர், திருமூர்த்திமலை, அவிநாசி கோவில்களில் இருந்து பக்தர்களால் தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டன.புனித தீர்த்தம், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில் ப்பக்குளத்தில் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின், யாக சாலையில் நிறுவப்படும் தங்கம், வெள்ளி கலசங்களில், புனிதநீர் ஊற்றப்பட்டது. மேளதாளங்கள், வாண வேடிக்கை முழங்க, ஸ்வேஸ்வர சுவாமி கோவிலுக்கு, சிவாச்சார்யார்கள், ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
தொடர்ந்து, கோவிலில், நவக்கிரக ஹோமம், புண்யாகவாசனை, கலாகர்ஷனம், யாக சாலைக்கான அக்னி ருவாக்குதல் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.நேற்று மாலை, 5:30க்கு, 38 யாக குண்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில், முதற்கால யாக பூஜைகள் துவங்கின. கணபதி பூஜை, கும்ப அலங்காரம், கட ஸ்தாபனம் செய்யப்பட்டன. சிவபெருமானுக்கு அமைக்கப்பட்டுள்ள, பஞ்சாட்சர வேதிகைகளான நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என, பஞ்ச பூதங்களில் சுவாமி எழுந்தருளல் மற்றும் அம்பாள், சுப்ரமணியர், சனீஸ்வர பகவான் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள், கும்பங்களில் எழுந்தளும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அதன்பின், யாக குண்டங்களில், மூலிகை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான யாக பொருட்கள் இடப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க, வேள்வி நடைபெற்றது. பின்னர், முதற்கால யாகத்தின் நிறைவேள்வி, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், திருப்பணிக்குழு, ஆதீஸ்வரா டிரஸ்ட் நிர்வாகிகள், பக்தர்கள் கேற்றனர். யாக சாலை பூஜைகளை, திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலயம் முதல்வர் ராஜாபட்டர் தலைமையில், 120 சிவாச்சார்யார்கள் நடத்துகின்றனர். விழாவில், இன்று காலை, 9:05 முதல், 11:35 வரை, இரண்டாம் கால யாக பூஜையும்; மாலை, 5:35 முதல், 8:35 வரை மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது.