பதிவு செய்த நாள்
04
ஏப்
2016
12:04
விழுப்புரம்: விழுப்புரம், எடத்தெரு ஏழைமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 30ம் தேதி காலை 9:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம் நடந்தது. பின், 1ம் தேதி கோ பூஜை, தன பூஜை, லட்சுமி பூஜை, முதல் கால யாகசாலை பூஜைகளும், 2ம் தேதி விசேஷசாந்தி, இரண்டாம் கால பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 9:00 மணிக்கு நாடி சந்தனம், மஹா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு மற்றும் காலை 9:30 மணிக்கு விமானம் மற்றும் ஏழை மாரியம்மன், பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.