கடலூர் மாவட்டம் திருவதிகை வீரட்டானத்தில் அருள்புரியும் வீரட்டானேஸ்வரர் மீது பாடிய இந்த பாடல் திருநாவுக்கரசரின் முதல் பதிகமாகும். இதன் மூலம் நாவுக்கரசருக்கு சூலை நோய் என்னும் வயிற்றுவலி நீங்கியதாக வரலாறு கூறுகிறது. இதை பாடினால் வயிறு சம்பந்தமான நோய்கள் விரைவில் நீங்கும் என்பது ஐதீகம்.
கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான் அறியேன் ஏற்றாய் அடிக்கே இரவும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே.
நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன் வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர் அஞ்சேலும் என்னீர் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே.
முன்னம் அடியேன் அறியாமையினால் முனிந்து என்னை நலிந்து முடக்கியிடப் பின்னைஅடியேன்உமக்கு ஆளும் பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் தன்னை அடைந்தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர்தம் கடன் ஆவதுதான் அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே.