பதிவு செய்த நாள்
21
மே
2016
10:05
திருவாரூர் : திருவாரூர் அருகே, முடிகொண்டானில், ஸ்ரீஆலங்குடி சுவாமிகளின் ஆராதனை மகோற்சவம் நேற்று நடந்தது. திருவாரூர் அருகே, முடிகொண்டான் கிராமத்தில்,ஸ்ரீ ஆலங்குடி சுவாமிகள் முக்தி அடைந்தார். இங்கு ஆண்டுதோறும், சுவாமிகளின் ஆராதனை மகோற்சவம் நடந்து வருகிறது.கடந்த, 13ம் தேதி, 81ம் ஆண்டு மகோற்சவம் துவங்கியது. அன்று இரவு, 7:00 மணிக்கு, ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம் நடந்தது. மறுநாள், 14ம் தேதி முதல், 19ம் தேதி வரை, காலை, 6:30 மணி முதல், 11:30 மணி வரை, அதிஷ்டானத்தில் ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம், சதுர்வேத பாராயணம், அதிஷ்டான பூஜையும், மண்டபத்தில், காலை, 8:00 முதல், 11:30 மணி வரை, அஷ்டபதி ஸம்ப்ரதாய பஜனையும், பகல், 12:00 மணிக்கு, பூஜோபசாரம், ஸமாராதனையும் நடந்தது. தினமும் பிற்பகல், 2:00 மணி முதல், 4:00 மணி வரை, ஸ்ரீ பிரேமிகசதகம் சங்கீர்த்தனம், மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரையும், இரவு, 7:30 மணி முதல், 9:30 மணி வரை, ஸ்ரீமத் பாகவத உபன்யாசமும், இரவு, 10:00 மணிக்கு, டோலோத்சவமும் நடந்தது. நேற்று காலை, 6:30 மணி முதல், 9:30 மணி வரை, அதிஷ்டானத்தில் ஸ்ரீமத்பாகவத மூல பாராயணம் பூர்த்தி, சதுர்வேத பாராயணம், அதிஷ்டான பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, மண்டபத்தில் ஆராதனைதுவங்கியது. மாலை, 4:00 மணிக்கு, ருக்மணி கல்யாணம்,பிரவசனம்; மாலை, 6:00 மணிக்கு, சுவாமிகள் வீதி உலா, இரவு, 7:00 மணிக்கு, மங்கள ஹாரத்தியுடன் மகோற்சவம் நிறைவுபெற்றது. விழா ஏற்பாடுகளை,ஸ்ரீ ஆலங்குடி சுவாமிகள் ஆராதனா சபா டிரஸ்ட் தலைவர் சுந்தரம்,நிர்வாக அறங்காவலர் தண்டபாணி, செயலர் சங்கரநாராயணன், பொருளாளர் சாமிநாதன் ஆகியோர்செய்திருந்தனர்.