கடலூர் மாவட்டம் திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் மீது திருநாவுக்கரசர் பாடிய
பாடல்கள் இவை. கணவர், பிள்ளைகள் தீய நண்பர்களால் வழி தவறி நடந்தால்,
அவர்கள் திருந்த இதைப் படிக்கலாம்.
ஊனுடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள்ளெலும்பு துõணாவு ரோமம் மேய்ந்து தாம் எடுத்த கூரை தவிரப் போவார் தயக்கம் பலபடைத்தார் தாமரையினார் கானெடுத்து மாமயில்களாலும் சோலைக் கழிப்பாலை மேய கபாலப்பனார் வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும் வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
முறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று முன்னுமாய்ப் பின்னுமாய் முக்கண் எந்தை பிறையார்ந்த சடைமுடிமேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்துடன் வைத்தார் பெரிய நஞ்சுக் கறையார்ந்த மிடற்றடங்கக் கண்ட எந்தை கழிப்பாலை மேய கபாலப்பனார் மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
நெறிவுண்டாக் கருதாதே நிமலன் தன்னை நினைமின்கள் நித்தலும் நேரிழையாளாய ஒளிவண்டார் கருங்குழலி உமையாள் தன்னை ஒரு பாகத்தமர்ந்து அடியாருள் ஏத்தக் களிவண்டார் கரும்பொழில்சூழ் கண்டல் வேலிக் கழிப்பாலை மேய கபாலப்பனார் வளியுண்டார் மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே. ... பொடிநாறு மேனியர் பூதிப் பையர் புலித்தோலர் பொங்கரவர் பூண நுõலர் அடிநுõறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆனஞ்சு மாடும் ஆதிரையினார் தாம் கடிநுõறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபாலப்பனார் மடிநாறு மேனியிம் மாயம் நீங்க வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
விண்ணனாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும் எண்ணானாய் எழுத்தானாய் கடல் ஏழானாய் இறையானாய் எம்மிறையே என்று நிற்கும் கண்ணானாய் காரானாய் பாரும் ஆனாய் கழிப்பாலை உள்ளுறையும் கபாலப்பனார் மண்ணாய மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே. விண்ணப்ப விச்சாதரர்கள் ஏத்த விரிகதிரான் எரிசுடரான் விண்ணுமாகிப் பண்ணப்பன் பத்தர் மனத்துளேயும் பசுபதி பாசுபதம் தேச மூர்த்தி கண்ணப்பன் கண்ணப்பக் கண்டுகந்தார் கழிப்பாலை மேய கபாலப்பனார் வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.