இழந்த செல்வத்தை மீட்டுத்தரும் பைரவர் வழிபாட்டு முறைகள்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2016 03:06
இழந்த பொருளை மீட்கவும் நமக்கு வரவேண்டிய சொத்துக்கள், பணம் வந்துசேரவும் கீழுள்ள பரிகாரத்தைச் செய்யவும் பைரவர் கோயிலில் செவ்வாய்கிழமையில் அல்லது மாலை நேரத்தில் பூசணிக்காய். மாதுளம் பழத்தில் மிளகு தீபமேற்றி வழிபாடு செய்தால் அனைத்து பொருட்களையும் மீட்டுவிடுவீர்கள். (செவ்வாய்க்கிழமையில் மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரையிலும் ராகு காலம் வருகின்றது). அனைவரும் பலன்பெறலாம்.
எதிர்ப்புகள் அகன்று வெற்றிகள் குவிந்தடவும் சகோதரர்களுக்குள் ஒற்றுமை ஏற்படவும் குடும்பத்தில் ஒற்றுமை வலுவடையவும் கீழுள்ள எளிய பரிகாரத்தை செய்யவும் 22 எலுமிச்சம் பழத்தை மாலையாகக் கோத்து செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் அல்லது மாலை வேளையில் பைரவருக்கு அணிவிக்க வேண்டும். இதனை ஒன்பது வாரம் செய்ய வேண்டும் 9-ஆவது வாரம் பைரவருக்கு கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்திட வேண்டும். இதுவொரு முக்கியமான அபிஷேகம். இந்த அபிஷேகம் செய்தால் மேற்சொன்ன பலன்களை அடையலாம்.