Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உயிர்களுக்கு அருளை வாரி வழங்கிக் ... நவராத்திரி நாமாவளி! நவராத்திரி நாமாவளி!
முதல் பக்கம் » நவராத்திரி வழிபாடும் சிறப்பும்!
நவராத்திரியின் பிற சிறப்புகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 செப்
2011
04:09

ஒரு வருடம் கெடாத தேங்காய்

நவராத்திரி சமயத்தில் நெமிலி திரிபுரசுந்தரி கோயிலில் கலசத்தில் வைக்கப்படும் தேங்காய் அடுத்த வருடம் வரை கெடாமலிருக்கும். அந்தத் தேங்காயை மறுவருட நவராத்திரியின்போது உடைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கின்றனர்.

அம்பிகையின் வாகனத்திற்கு தேங்காய் நீர்

மும்பை மும்பாதேவி ஆலயத்தில் ரிஷப வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள் அம்பிகை. இங்கே நவராத்திரி ஒன்பது நாட்களும் தேங்காய் உடைத்து அதன் நீரை அம்பிகையின் வாகனத்தில் ஊற்றி விடுகின்றனர். நவராத்திரி நாட்களில் வளர்க்கப்படும் ஹோமத்தின் சாம்பலை புருவத்தில் பூசிக் கொள்கின்றனர்.

வளையல் அணியும் சரஸ்வதி

நாகை மாவட்டம் கடலங்குடி சிவாலயத்தில் சரஸ்வதி வளையல்கள், கொலுசுகள், முத்துச்சரங்கள், நெற்றிப்பட்டம், கிரீடம் ஆகியவற்றுடன் சகல ஆபரண பூஷணியாகக் காட்சியளிக்கிறாள்.

கலஞ்சன்

இந்தோனேஷியாவிலும், பாலித்தீவிலும் புத்தகங்களை அலங்கரித்து பூஜிக்கும் வழக்கம் இருக்கிறது. இப்பூஜைக்கு கலஞ்சன் என்று பெயர். விஜயதசமி நாளில் பாலித்தீவில் தம்பாத்ஸைரிம் என்னும் குளத்தில் நீராடி புத்தகங்களை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்று மக்கள் நம்புகிறார்கள்.

மாணவி வடிவில் சரஸ்வதி!

சிருங்கேரியில் ஆதிசங்கரர் சாரதாம்பாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இங்கு தற்போதும் தேவி ஒரு மாணவியைப் போல் படிக்கின்ற கோலத்தில் அமர்ந்திருக்கிறாள். கைகளில் சுவடி, ஜபமாலை, கெண்டி, ஞானமுத்திரை கொண்டு சர்வ ஆபரணங்களுடன் பத்மாசனத்தில் காட்சி தருகிறார். இங்கு சாரதா நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

லட்சுமியின் வாகனம் ஆந்தை

வங்க தேசத்தில் லட்சுமியின் வாகனமாக ஆந்தையைப் போற்றி வழிபடுகின்றனர். நவராத்திரி நாட்களில் தங்களது வீட்டு மேற்கூரையில் ஆந்தை அமர்வது அதிர்ஷ்டம் என்கின்றனர். ஆந்தை குரல் எழுப்பினால் சுபகாரியங்களுக்கு திருமகள் சம்மதம் தெரிவித்து விட்டதாக நம்புகின்றனர்.

பூஜிக்க உகந்த நேரம்...

நவராத்திரி நான்கு வகைப்படும். பங்குனி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்கி, ஸ்ரீராமநவமி வரை நடைபெறுவது வசந்த நவராத்திரி. மாசி மாத அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்குவது ராஜமாதங்கி நவராத்திரி. ஆடி அமாவாசைக்கு மறுநாள் துவங்குவது மகா வராஹி நவராத்திரி. புரட்டாசி வளர்பிறையில் துவங்கி அனுஷ்டிப்பது சாரதா நவராத்திரி! இந்த வருடம், வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி, புதன்கிழமை (புரட்டாசி - 11) அன்று நவராத்திரி ஆரம்பம். அக்டோபர் 5-ஆம் தேதி புதன்கிழமையன்று (புரட்டாசி - 18) சரஸ்வதி பூஜை. அன்று காலை 9.00 மணி முதல் 12.00 மணிக்குள் ஏடு அடுக்கி, சரஸ்வதிதேவியை பூஜித்து வழிபடுவது உத்தமம்.

ஏடு பிரிக்கும் நேரம்: மறுநாள் அக்டோபர் 6-ஆம் தேதி, வியாழன் அன்று (புரட்டாசி-19) விஜயதசமி. அன்றைய தினம், காலை 7.00 மணிக்குமேல் பூஜித்து, ஏடு பிரிக்கலாம். விஜயதசமிக்கு மறுநாள் கொலுவை எடுத்து வைப்பது வழக்கம். இந்த முறை வெள்ளிக்கிழமை என்பதால், இரண்டு பொம்மைகளை அப்படியே சாய்த்து வைத்துவிட்டு, மறுநாள் (சனிக்கிழமை) பொம்மைகளை எடுத்து வைக்கவேண்டும்.

ஒரு மணி நேரம் மட்டும் தாயாரைப் பிரியும் பெருமாள்!

உப்பிலியப்பன் கோயிலில் பெருமாள் தாயாரை விட்டு எங்கும் பிரிவதில்லை. எல்லா விழாக்களிலும் சேர்ந்தே காட்சி தருவாராம். ஆனால் நவராத்திரி அம்பு போடும் வைபவத்தின்போது ஒரு மணி நேரம் மட்டும் தாயாரைப் பிரிந்து தனியே இருப்பாராம்.

வந்தாள்... மகாலட்சுமியே....

மகா என்ற சிறப்பான அடைமொழி லட்சுமிக்கு, மேலும் பெருமையைத் தருகிறது. லட்சுமி என்ற சொல்லுக்கு அழகு, செல்வம், அன்பு, அமைதி, அறிவு, கருணை, இன்பம், நோயற்ற வாழ்வு, பொருள், வெற்றி என்றெல்லாம் அர்த்தங்கள் இருப்பதாக ஞான நூல்கள் கூறுகின்றன. லட்சுமியை வழிபட்டால் பதினாறு பேறுகள் கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. கீர்த்தி, வீரம், வெற்றி, சந்தானம், மேதை, கல்வி, துஷ்டி, ஞானம், சக்தி, சாந்தி, சாம்ராஜ்யம், ஆரோக்கியம், மோட்சம், செல்வம் என்பவையாகும். சாந்த குணம் கொண்ட லட்சுமி, ஒருமுறை அசுரன் ஒருவனை வதம் செய்யும்படி நேரிட்டது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயிலிருந்து சுமார் இருநூறு கி.மீ. தொலைவில் உள்ளது கோலாப்பூர். இத்தலத்தில் அசுரன் கோலா என்பவனை சிம்மவாகினியாக வந்து லட்சுமி அழித்தாள். எனவே, இத்தலம் கோலாப்பூர் எனப்பட்டது.

ஒரிசாவில் காமகலா பீடேஸ்வரி என்னுமிடத்தில் சந்தான லட்சுமியாகவும், பீகாரில் சித்தேஸ்வரி வடிவில் சித்த லட்சுமியாகவும், அஸ்ஸாம் மாநிலத்தில் ஆதிலட்சுமி என்ற பெயரிலும், திரிபுராவில் சௌம்ய லட்சுமியாகவும், உத்தரப் பிரதேச காசி மாநகரில் அன்னபூரணியாகவும், மத்தியப் பிரதேசத்தில் யோக லட்சுமியாகவும், நாகாலாந்தில் நாகலட்சுமியாகவும், அரியானா மாநிலத்திலும் பஞ்சாபிலும் சண்டியின் வடிவமாக தைரிய லட்சுமியாகவும், இமாசலப் பிரதேசத்தில் வைஷ்ணவிதேவி ரூபமாகவும், ராஜஸ்தானில் மகாகாளியின் வடிவமான தான்ய லட்சுமியாகவும் போற்றப்படுகிறாள். குஜராத்தில் லட்சுமி பூஜை மிகவும் பிரபலமானது மட்டுமல்ல. வித்தியாசமானதும்கூட! லட்சுமியின் கையில் வீணை இருக்கும். அங்கு ஸ்வஸ்திக் திருவுருவை சக்கரம் போல் பாவித்து அதற்குரிய மந்திரம் சொல்லி லட்சுமியாக வழிபடுகிறார்கள்.

தாமரை மலரில் அமர்ந்திருக்கும் லட்சுமியின் வாகனம் முதலை என்று சொல்லப்பட்டாலும், வங்காளிகள் ஆந்தையை லட்சுமியின் வாகனமாகப் போற்றுகிறார்கள். மகாராஷ்டிராவில் விவசாயிகள் லட்சுமியைப் பயிர் வளத்தைச் செழிக்க வைக்கும் தெய்வமாக வழிபடுகிறார்கள். தமிழகத்தில் லட்சுமியை ஆவணி மாதத்தில் வளம்தரும் வரலட்சுமியாக பூஜிக்கிறார்கள். ஆந்திர மாநிலத்திலும் ஆவணியில் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், கர்நாடகாவிலும் கேரளாவிலும் மகாலட்சுமி வழிபாடு மிகவும் போற்றப்படுகிறது. நவராத்திரி காலங்களில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி, ஆகிய முப்பெரும் தேவியர்களை இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களில் வசிப்பவர்களும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவது யாவரும் அறிந்ததே! லட்சுமிதேவியை வழிபட்டால் செல்வ வளம் சேரும்; புகழ் கிட்டும்; வளமான வாழ்வு நிரந்தரம் என்று சாஸ்திரம் கூறுகிறது.

ஷரத் பூர்ணிமா!

தமிழகத்தில் வீரம், செல்வம், கல்வி வரம் தரும் முப்பெருந்தேவியரை நவராத்திரியில் வழிபடுகிறார்கள். வங்காளத்தில் தேவி பூஜை விசேஷம். பெரிய பெரிய காளி விக்கிரகங்களைச் செய்து வைத்து வழிபட்டு, விஜயதசமி தினத்தன்று அவற்றை நீரில் கரைப்பார்கள். வெளி மாகாணங்களில் வசிக்கும் வங்காளிகளும், காலி பாரி என்பது போன்ற சங்கங்களை அமைத்து 10 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். பந்தல் அலங்காரத்தில் போட்டிகள் வைத்து, மிகச் சிறந்தவற்றுக்கு பரிசுகளும் வழங்குவார்கள். தொடர்ந்து வரும் பவுர்ணமியை ஷரத் பூர்ணிமா என்பர். இந்த நாள் வரையிலும் நண்பர்களுக்கு இனிப்புகள், மிஷ்டி எனப்படும் பால் பாயசம் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் செய்யப்பட்ட ஜாமூன்களை விநியோகித்து மகிழ்வார்கள்.

குஜராத்தில்... இரவு நேரங்களில் பெண்கள் கூடி, கர்பா மற்றும் தாண்டியா நடனங்கள் ஆடுவார்கள். மலர்களாலும் வெற்றிலையாலும் அலங்கரிக்கப்பட்ட குடத்தின்மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் கும்மியடித்து ஆடுவது கர்பா; தாண்டியா என்பது நம்மூர் கோலாட்டம் போன்றது. பஞ்சாபிலும் தேவியை பூஜித்து பஜனை மற்றும் ஜாகரணை (இரவு கண் விழித்தல்) செய்து வழிபடுவர். மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் விஜயதசமி... ராவணனை வென்று ஸ்ரீராமன் வெற்றி சூடிய நாளாகக் கொண்டாடப் படுகிறது. அன்றைக்கு ஸ்ரீராம் லீலா வைபவம் சிறப்பாக நடைபெறும்.

 
மேலும் நவராத்திரி வழிபாடும் சிறப்பும்! »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிப்பாள். மஹாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். ... மேலும்
 
temple news
பெரிய பதவிகள் அடைய... சந்திரகாந்தா வழிபாடு!: உலகம் அனைத்தும் சக்தி மயம் என்ற தத்துவத்தை விளக்க வந்ததே, ... மேலும்
 
temple news
இன்று அம்பிகையை மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். கவுமாரி, குமார கண நாதம்பா என்றும் ... மேலும்
 
temple news
பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ ... மேலும்
 
temple news
விஜயதசமியோடு நவராத்திரி நிறைவு பெறுகிறது. இந்நாளில் பராசக்தியின் மூன்று வடிவங்களான சரஸ்வதி, லட்சுமி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar