புதுச்சேரி: குருமாம்பேட் ராகவேந்திரா சுவாமி ஆராதனை விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குருமாம்பேட் ராகவேந்திரா சுவாமி மட் மந்த்ராலயத்தில், ராகவேந்திரா சுவாமிகளின் 345வது பூர்வ ஆராதனை விழா நிர்மால்யா விசர்ஜனத்துடன் துவ ங்கியது. 8.30 மணிக்கு மகா சிறப்பு அபிஷேகம் நடந்தது. 11 மணிக்கு கனகாபிஷேகம், 12 மணிக்கு ஹஸ்தோதகம் நடந்தது. இரவு 8 மணிக்கு பல மந்த்ராட்சதை நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 20ம் தேதி மத்ய ஆராதனை விழா, 21ம் தேதி உத்ர ஆராதனை விழா நடக்கிறது. இதனையொட்டி சிறப்பு சொற்பொழிவும், வீணை கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை ராகவேந்திரா சுவாமி மட் மந்த்ராலயாவின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.