இருக்கன்குடியில் உண்டியல் திறப்பு ரூ.95.93 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2016 11:09
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று மூன்றாம் கட்டமாக உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது. இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆக.,16ல் திறக்கப்பட்ட தற்காலிக உண்டியல்களில் 14.97 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்தது. ஆக.,29ல் திறக்கப்பட்ட நிரந்தர உண்டியல்களில் ரூ.34 . 46 லட்சம் காணிக்கை கிடைத்தது. செப்.1ல் திறக்கப்பட்ட நிரந்தர உண்டியல்கள் ரூ. 46. 50லட்சம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். தங்கம் 297 கிராம், வெள்ளி 689 கிராம் இருந்தது. கோயில் உண்டியல்கள் கோயில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி, இந்து சமய அற நிலையத்துறை உதவி ஆணையர் ஹரிகரன், பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன்பூஜாரி, ராமர் பூஜாரி, கதிரேசன் பூஜாரி, அரிராம்பூஜாரி ஆகியோர் முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டது. காணிக்கை கணக்கிடும் பணியில் சாய்பாபா மன்றத்தினர் மற்றும் கோயில் அலுவலர்கள் ஈடுபட்டனர். காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டதால் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.