பதிவு செய்த நாள்
29
நவ
2016
12:11
திருப்பதி: திருமலையில், 2.23 கோடி ரூபாய் செலவில், திவ்ய தரிசன காத்திருப்பு அறை சமீபத்தில் திறக்கப்பட்டது. இங்கு, பாத யாத்திரையாக வரும் பக்தர்கள், தங்கள் உடைமைகளை வைத்து விட்டு, சிற்றுண்டி சாப்பிடலாம். இதன்பின், இலவச லட்டு, டோக்கன் மற்றும் மானிய விலை லட்டு, கூடுதல் லட்டு டோக்கன், தலா இரண்டு என, ஐந்து டோக்கன்களை பெற்று, தரிசனத்திற்கு செல்கின்றனர். சில இடைத்தரகர்கள், இந்த காத்திருப்பு அறைக்குள் நுழைந்து, லட்டு டோக்கன்களை பெற்று, அதிக விலைக்கு விற்பதாக, புகார் எழுந்துள்ளது.அதனால், பக்தர்கள் தரிசன வரிசைக்குள் சென்ற பின், மீண்டும் ஒருமுறை லட்டு டோக்கனை, ஸ்கேன் செய்தால், முறைகேடு தடுக்கப்படும் என, பக்தர்கள், தேவஸ்தானத்திற்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.