கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) யோகம் வந்தாச்சு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2016 02:12
கடமை உணர்வுமிக்க கன்னிராசி அன்பர்களே!
சனிபகவான் 3ம் இடத்திலும், செவ்வாய், கேது இரண்டும் இணைந்து 6ம் இடத்திலும் இருப்பதால் யோகமான பலன்கள் காத்திருக்கிறது. சுக்கிரன் டிச.29 வரையும், புதன் டிச.19 வரையும், ஜன.7 க்கு பிறகும் நன்மை தருவர். புதன் டிச.19ல் வக்ரம் அடைந்து உங்கள் ராசிக்கு 3ம் இடமான விரு ச்சிகத்திற்கு மாறுகிறார். அதன் பின் ஜன.8ல் வக்ர நிவர்த்தி அடைந்து தனுசுவிற்கு செல்கிறார். புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி உண்டாகும். மனதில் பக்தி உயர்வு மேம்படும். பொருளாதார வளம் மேம்படும்.புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலமான காலமாக அமையும். எல்லா விதத்தி லும் நற்பலன் உண்டாவதால் சிறப்பான மாதமாக அமையும். குடும்பத்தில் பொன், பொருள் சேரும். குடும்பத்தினர் மத்தியில் மகிழ்ச்சி நிலைக்கும். சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். டிச.21,22ல் பெண்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். டிச.17,18, ஜன.13ல் விருந்தினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் டிச. 28,29, 30ல் அவர்கள் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். டிச.19 முதல் ஜன.7 வரை அரசாங்க வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. சிலர் திடீர் சோதனைக்கு ஆளாகலாம். எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஜன.2,3 ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். டிச.19,20,23,24ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். ஜன.8க்கு பிறகு வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளலாம். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
பணியாளர்கள் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். பணியிடத்தில் செல்வாக்குடன் விள ங்குவர். வேலையில் திருப்தி காண்பீர்கள். டிச.19 முதல் ஜன.7 வரை அரசு வேலையில் இருப்பவர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. ஜன.7க்கு பிறகு தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். டிச.16, ஜன.11,12ல் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புண்டு.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வளர்ச்சி காண்பர். அரசு வகையில் இருந்து பாராட்டு கிடைக்க பெறலாம். டிச.28க்கு பிறகு முயற்சியில் தடை ஏற்பட வாய்ப்புண்டு.
அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். தொண்டர்களுக்காக பணம் செலவழிக்க நேரிடும். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
மாணவர்கள் நல்ல நிலையில் இருப்பர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். டிச.19 முதல் ஜன.7 வரை விடாமுயற்சி தேவைப்படும்.
விவசாயிகள் நல்ல விளைச்சல் காண்பர். குறிப்பாக கரும்பு, நெல், கோதுமை, சோளம், கேழ்வரகு ஆகிய பயிர்களில் அதிக வருமானம் காணலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் உயரும். புதிய சொத்து வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். குடும்பவாழ்வில் குதுõகலம் உண்டாகும். தோழிகள் உங்களுக்கு உதவிகரமாக இ ருப்பர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜன.8க்கு பிறகு குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர்.குறிப்பாக பெண் காவலர்கள் சிறப்பான பலன் பெறுவர். டிச.25,26,27ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்க பெறலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
நல்ல நாள்: டிச.16,17,18,21,22,25,26,27. ஜன.2,3,4,5, 6,11,12,13
கவன நாள்: ஜன. 7,8 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் புதிய முயற்சி எதிலும் ஈடுபட வேண்டாம். சுபநிகழ்ச்சி தொடர்பான பேச்சு வார்த்தையைத் தள்ளிப் போடலாம். அனாவசியமாக எதிலும் தலையிடுவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண்: 7,9 நிறம்: சிவப்பு, கருப்பு
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபட்டு அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் நடக்கும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளு ங்கள். கிருஷ்ணரை வழிபடுங்கள். பசுவுக்கு பழம், கீரை கொடுங்கள்.
மேலும்
ஆடி ராசி பலன் (17.7.2025 முதல் 16.8.2025 வரை) »