துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) பிள்ளைகளால் பெருமை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2016 02:12
நல்லதை மட்டுமே நினைக்கும் துலாம் ராசி அன்பர்களே!
சுக்கிரன் டிச.29ல் மகரத்தில் இருந்து கும்பத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை செய்வார். 3ல் சூரியன், 11ல் ராகு ஆகியோராலும் நன்மை பெருகும். புதன் டிச.19ல் வக்ரம் அடைந்து விருச்சிகத்திற்கு மாறினாலும், அதன் பின் ஜன. 8ல் வக்ர நிவர்த்தி அடைந்து தனுசுவிற்கு சென்றாலும் நன்மை உண்டாகாது. ராசிக்கு 2ல் இருக்கும் சனி, 12ல் இருக்கும் குரு ஆகியோராலும் சுமாரான பலனே கிடைக்கும். சனியின் 3,7,10ம் பார்வையால் சிறப்பான பலன் கிடைக்கும். சூரியனால் ஏற்பட்ட வீண் செலவு இனி மறையும். பொருளாதார வளம் சிறக்கும். கையில் பணப் புழக்கம் அதிகமாகும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். டிச.19 முதல் ஜன.8 வரை வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். சனியின் பார்வையால் எந்த இடையூறையும் முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் சிறு சிறு பிரச்னை உருவானாலும் வந்த வேகத்தில் மறைந்து விடும். டிச.28க்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். பி ள்ளைகளால் பெருமை உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். பக்தி உயர்வு மேம்படும். டிச.23, 24ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். டிச.19,20ல் விருந்தினர்கள் வருகையும் அவர்களல் நன்மையும் கிடைக்கும். டிச.31, ஜன.1ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். மாதத் தொடக்கத்திலும், மாத இறுதியிலும் வீட்டினுள் சிற்சில பிரச்னை வரலாம். சிற்சில விஷயங்களில் பொறுமையாகவும், விட்டுகொடுத்து போகவும். உடல்நலம் சிறப்படையும். மருத்துவச் செலவு குறையும். செவ்வாயால் பய ணத்தின் போது கவனம் தேவை.
தொழில், வியாபாரத்தில் சூரியனால் வளர்ச்சி உண்டாகும். சேமிக்கும் விதத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். ஆனாலும் இது ஏழரை சனி காலம் என்பதால் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும். இருக்கும் தொழிலை வளப்படுத்துவது நன்மையளிக்கும். டிச.21,22,25,26,27ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஜன.4,5,6ல் எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு சலுகை கிடைக்கப் பெறுவர். பிறர் உதவியை நாடாமல் தன்னை நம்பி உழைத்து முன்னேறுவீர்கள். விடாமு யற்சியால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். டிச.17,18, ஜன.13ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். ஜன.8 க்கு பிறகு பணியாளர்களுக்கு விரும்பிய இட, பணிமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு ஆதாயம் காண்பர். மக்கள் மத்தியில் புகழும், பாராட்டும் கிடைக்க பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. அதே நேரம் செல்வாக்குக்கு எந்த பாதிப்பும் உண்டாகாது.
மாணவர்களுக்கு விடாமுயற்சி தேவைப்படும். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் போட்டிகளில் வெற்றி பெறுவது கடினம் தான். அதே நேரம் குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது. ஜன.2,3ல் வீண் குழப்பத்திற்கு ஆளாகலாம்.
விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதற்கேற்ப வருமானத்தை காணலாம். குறிப்பாக மானாவாரி பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும். பழ வகைகளில் ஓரளவு வருமானத்தை காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு விவகாரத்தில் சுமூ கத்தீர்வு கிடைக்கும்.
பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பை பெற்று மகிழ்வர். சுக்கிரனால் மதிப்பு மரியாதை உயரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். டிச.29க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். டிச.28,29,30ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.
நல்ல நாள்: டிச.17,18,19,20,23,24,28,29, 30, ஜன. 4,5,6,7,8,13
கவன நாள்: ஜனவரி 9,10 சந்திராஷ்டமம். இந்நாட்களில் அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். சுபநிழ்ச்சி குறித்த ÷ பச்சு வார்த்தையைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண்: 3,5 நிறம்: வெள்ளை, சிவப்பு
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு நன்மையளிக்கும். முருகன் கோவிலுக்கு செல்ல தவறாதீர்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.
மேலும்
ஆடி ராசி பலன் (17.7.2025 முதல் 16.8.2025 வரை) »